முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின்
24வது நினைவு தினம் இன்று
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தினம் இன்று இடம்பெறவுள்ளது.
நினைவு தின வைபவம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் இன்று; காலை ஆரம்பமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 24வது நினைவு தினத்தை முன்னி;ட்டு கொழும்பு ஸ்ரீ சுச்சரித்த மண்டபத்தில் நேற்று இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி தர்ம போதனை இடம்பெற்றது.
இன்று காலை கொழும்பு {ஹணுப்பிட்டிய காங்காராம விஹாரையில் மஹாசங்கத்தினருக்கு தானம் வழங்கப்படும்.
நினைவு தினக் குழுவின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த பிங்கம நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
கொழும்பு மாவட்டத்தில் 250 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உறுதிகள் மற்றும் கடன் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெறும். அமைச்சர் சஜித் பிரேமதாசவின் யோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment