அம்பாந்தோட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட
நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் திட்டம் பற்றிய
சாத்திய வள ஆய்வொன்றினை நடாத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
துறைமுகத்தினையும் முன்மொழியப்பட்ட விசேட கைத்தொழில் வலயத்தினையும் உள்ளடக்கி அம்பாந்தோட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் திட்டம் பற்றிய சாத்திய வள ஆய்வொன்றினை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை சைனா ஹெவி மெசினறி நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும்,
அவ்வாய்வின் முடிவுகளின் படி குறித்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக சுவிஸ் செலேன்ஜ் செயன்முறையில் ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்கும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment