பிரதமர் ரணில் விக்ரமசிங்க
25ஆம் திகதி டெல்லி
செல்கிறார்
இந்திய பிரதமர்
நரேந்திரமோடி இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்பு
பிரதமர் ரனில்
விக்ரமசிங்க எதிர் வரும்ற 25ஆம் திகதி டெல்லி
செல்கிறார் என அறிவிக்கப்படுகின்றது.
பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் (மே) இலங்கை வருகிறார். இங்கு நடைபெறும் சர்வதேச புத்த மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
அப்போது இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்து பேசுகிறார்..
மற்றும் இந்தியா-இலங்கை இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் இழுபறியில் உள்ளது. மோடி இலங்கை பயணத்தின் போது இப்பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க 25ஆம் திகதி டெல்லிக்கு விஜயம் செய்கிறார். அப்போது இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை சந்திக்கிறார்.
இவர்களுடனான சந்திப்பின்போது இலங்கையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி கட்ட போரின் போது பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது.
நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு 2015-ம் ஆண்டு முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்திருந்தார். வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை தலைநகர் கொழும்புடன் இணைக்கும் புகையிரதப் பாதையை தொடங்கி வைத்தார். தற்போது 2-வது தடவையாக அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
0 comments:
Post a Comment