ஆசிரிய உதவியாளர்களுக்கு ரூபா. 10,000
பெப்ரவரி மாதம்
முதல் மாதாந்த அலவன்ஸ் அதிகரிப்பு
(அபூ முஜாஹித்)
நாடாளவிய
ரீதியில் உள்ள
அரசாங்க பாடசாலைகளில்
கடமையாற்றும் ஆசிரிய உதவியாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு
பெப்ரவரி மாதம்
முதல் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக
கல்வியமைச்சு சகல கல்வி அலுவலகங்களுக்கும்
சுற்றறிக்கை மூலமாக அறிவித்துள்ளது.
கல்வியமைச்சின்
இத்தீர்மானத்திற்கமைய நாடாளவிய ரீதியில்
உள்ள 4665 ஆசிரிய
உதவியாளர்கள் நன்மையடையவுள்ளனர். இது தொடர்பான அமைச்சரவை
தீர்மானம் ஏப்ரல்
04ம் திகதி
கல்வி அமைச்சரின்
வேண்டுகோளுக்கமைய எடுக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசிரிய
உதவியாளர்கள் தொடர்பாக பின்வரும் தீர்மானத்தையும் அமைச்சரவை
எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில்
பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனங்களை வழங்குவதில்லை.
தற்போதுள்ள 4665 ஆசிரிய உதவியாளர்களுக்கும் ஆசிரியர் கலாசாலைகளில்
உள்ள வசதிகளை
கொண்டு சேவைக்கால
பயிற்சிகளை வழங்குதல்.
31.12.2016 உடன் முடிவடையும்
ஆசிரியர் உதவியாளர்களின்
சேவைக்காலத்தினை மேலும் இரண்டு வருட காலம்
நீடித்து வழங்கல்.
ஓய்வூதிய
கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்வதற்கு அரச சேவையில் 10 வருடம்
கட்டாயமாவதால் ஆசிரியர் பயிற்சியின் போது வயது
கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கல் ஆகிய தீர்மானங்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment