மருத்துவ சிகிச்சைக்காக18 மாதங்கள் தாமதித்தே
ரணில் அமெரிக்காவுக்குச் சென்றார்
18 மாதங்களாத் தாமதித்து வந்த மருத்துவ சிகிச்சைக்காகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன, மீண்டும் தள்ளிப்போட முடியாமல் போனதாலேயே அவர் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில்,
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு, கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். இலங்கையில், பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் இவ்வாறு சென்றமை, அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது, அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித, வெள்ள நிலைமை தொடர்பாக, தினமும் 4 தடவைகள், பிரதமருக்கு அறிக்கைகள் அனுப்பப்படுவதாகவும், இவ்விடயம் தொடர்பாக அவர், முழுமையான அறிவுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், என்னவாறான மருத்துவ தேவைக்காக, , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.அமெரிக்காவுக்குச் சென்றார் என்ற விடயத்தை, அமைச்சர் ராஜித வெளிப்படுத்தவில்லை.
0 comments:
Post a Comment