முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவலை

ஒன்றாக செயற்படுவது அவசியம் எனவும் தெரிவிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவலை வெளியிட்டுள்ளார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் குறித்து அவரது ருவிட்டர் பக்கத்தில் மஹிந்த கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படுவது அவசியம் எனவும் மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top