155 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி

நேற்று மாலை முதல் நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக களனி களுகங்கை ஜின்கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
நீர் மட்டம் அதிகரித்திருப்பதனால் இந்த நதிக்கருகாமையில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது.
 இதற்கு முன்னர் கேகாலை மற்றும் இரத்திபுரி மாவட்டங்களிலும் கட்டட ஆய்வு அமைப்பினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 காலி மாவட்டத்தில் பத்தேகம யக்கல முல்ல மற்றும் நாகொட பிரதேச செயலக பிரிவு பகுதிகளில் மண்சரிவு மற்றும் மண்மேடு உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கல, அகலவத்த , வளலாவிற்ற மற்றும் பதுரலிய ஆகிய பிரதேச செயலக பிரிவு பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் இருப்பதாக கட்டட ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
 இன்று காலை 8.30 மணியுடனான 24 மணித்தியால காலப்பகுதியில் பலப்பிட்டியவில் 197.05 மில்லிமீற்றரும் பத்தேகம காலி ஆகிய இடங்களில் 155 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top