எனது முகநூல்
கணக்கில் களையெடுக்கின்ற பணியை
மகளிடம் ஒப்படைத்துள்ளேன்.
யாராகிலும் பாதிக்கப்பட்டால் பொருந்திக் கொள்ளுங்கள்.
ஸஹருடைய
நேரத்தில் உணவருந்திக்
கொண்டிருந்தபோது எனது மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு
வந்தது.
”உங்கள்
முகநூல் கணக்கை
டிஅக்டிவேட் செய்யுங்கள் அல்லது, உங்களது நண்பர்கள்
பட்டியலில் இருந்து கொண்டு உங்களைத் தூற்றுவோரை
முடக்குங்கள்” என்று மறுமுனையில் அறிவுரை சொல்லப்பட்டது.
”ஏன்
மகள் அப்படி,
கருத்துச் சுதந்திரம்
எல்லாருக்கும் பொதுவானது தானே”
”இது
கருத்துச் சுதந்திரம்
இல்லை டடா,
உங்களைத் தூற்றுகிறவர்கள்
உங்களுக்கு நிகரான ஒருவராக இ்லையென்றாலும் ஓர்
”ஆள்” ஆகவாவது
இருக்க வேண்டாமா?,
நான் நிறைய
நேரமெடுத்து உங்களுக்குப் பின்னூட்டமிடுகின்றவர்களின்
பக்கங்களைப் போய் பார்த்தேன். இன்னும் உம்மாட
முந்தாணியப் புடிச்சிக்கிட்டுத் திரியறவனெல்லாம்,
எந்தவிதமான அரசியல் அறிவும், ஏன் புத்தியே
இல்லாத்தனமாக எழுதுகிறானுகள். அவர்களில் பலர் உளவியல்
நோயாளிகள். பரீட்சைகளில் ஃபெயிலான துயரம், வேலையின்மை,
உரிய வயதில்
திருமணமாகாமை, குழந்தையில்லாப் பிரச்சினை,
பிடிக்காத தொழிலை
சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
செய்வது, சிறைச்சாலையில்
ஊழியராக இருப்பது
- இப்படிப் பல நிலைகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான் உங்களைத் திட்டுகிறார்கள்.
இவர்களையெல்லாம் நீக்குகங்கள் டடா”
”எனக்கு
இதையெல்லாம் செய்ய நேரமில்லை மகள், இவர்களின்
கமண்ட்களை நான்
படிப்பதுமில்லை”
”இல்லை
அப்படி விடமுடியாது,
நீங்கள் படிக்கிறீர்களா
இல்லையா என்பது
முக்கியமில்லை, உங்களை நேசிக்கிறவர்களும், மரியாதை வைத்திருப்பவர்களும்
அவற்றைப் படிக்கிறார்கள்.
நீங்கள் பாஷிட்டிவான
மனிதர். உங்களைச்
சுற்றிப் பாஷிட்டிவானவர்கள்தான்
இருக்கவேண்டும். நெகடிவானவர்கள் இருக்கட்டும்.
ஆனால் அவர்கள்
இந்த முகநூலில்
நண்பர்களாக இருக்கவேண்டியதில்லை, வெளியே
இருக்கட்டும்”
ஆகவே,
களையெடுக்கின்ற பணியை எனது மகளிடமே ஒப்படைத்துள்ளேன்.
அவள் ஈவிரக்கம்
இல்லாது சிலரை
நட்புப் பட்டியலில்
இருந்து நீக்கிவிடுவாள்.
இடையூறுக்கு வருந்துகிறேன். நண்பர்கள் யாராகிலும் இதனால்
பாதிக்கப்பட்டால் பொருந்திக் கொள்ளுங்கள்.
- Basheer
Segu Dawood
0 comments:
Post a Comment