மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில்

விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர்

மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளார்.
இதன்போது அவரின் தைரியமான செயற்பாடு குறித்து ஜனாதிபதி பாராட்டியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமத்தில் விமானத்தின் ஊடாக உணவு மற்றும் வேறு அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும்வேளையில் அனர்த்தத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரின் விமானக் குழுவின் தலைவர் பானுக தெல்கஹகொட அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
இந்த சம்பவத்தின்போது இவர் மேற்கொண்ணட வீரம் மிகுந்த செயற்பாட்டிற்கு ஜனாதிபதி பாராட்டுத்தெரிவித்தார்.

ஒரு தொகை பொருட்களுடன் சென்ற இந்த ஹெலிகொப்டர் பத்தேகம பிரதேசத்தில் குறிப்பிட்ட கிராமத்தில் தரையிறங்க முற்பட்டவேளையில் ஹெலிகொப்டரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் குறித்த விமானி பாதுகாப்பான முறையில் ஹெலிகொப்டரினை வெள்ளத்தின் மேல் தரை இறக்கியுள்ளார்.


அவரும் ஏனைய அனைத்து செயற்குழுவினரும் பாதுகாப்பான முறையில் இருப்பதுடன் , ஹெலிகொப்டருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.


இதேவேளை, இலங்கை விமானப் படைக்கு சொந்தமான எம்;.. 17 ஹெலிகொப்டர் இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என விமானப் படைப் பேச்சாளர் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து துருப்பினரும் பாதுகாப்புடன் இருப்பதாக வான்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top