விமான பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
ஜூன் 1 முதல் புதிய நடைமுறை!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சூழலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பாதுகாப்பு நடைமுறைக்கு அமைய பயணி ஒருவர் தனது கைப் பையில் எடுத்துச் செல்லும் திரவ வகையான ஸ்பிரே, ஜெல் போன்ற பொருட்களுக்கு வரையறை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர், பானங்கள், சூப், ஜேம், சோஷ், இனிப்புகள், திரவங்கள், கிறீம், மருந்துகள், எண்ணெய், ஸ்பிரே, ஜெல், வாயு அழுத்தங்களை போன்றவை எடுத்துச் செல்லப்படுவது குறைக்கப்படும்.
மேலும் அனைத்து பொருட்களும் ஒரு லீட்டருக்கு குறைவானதாக இருக்க வேண்டும் என்பதுடன் வெளிப்படையாக தெரியும் பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட வேண்டும்.
ஒரு பயணி இதுபோன்ற ஒரு பொதியை மாத்திரமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment