நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால்
பலியானவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை,96 ஆகவும்,163,701குடும்பங்களைச் சேர்ந்த 629,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 84 பேர் பலியானதுடன்,கேகாலை மாவட்டத்தில் 7 பேர்,மாத்தறை மாவட்டத்தில் 28 பேர்,ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 05 பேர்,காலி மாவட்டத்தில் 15 பேர்,களுத்துறை மாவட்டத்தில் 62 பேர் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
இரத்தினபுரி,களுத்துறை பகுதிலேயே அதிகளவில் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.