மன்னாரிலிருந்து பொத்துவில் வரையிலான
கடற்பிரதேசத்தில் 70
கிலோமீற்றர் வரையில் காற்று
சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை
வளிமண்டல திணைக்களம் தெரிவிப்பு
வளிமண்டல திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்ட காலநிலை அறிக்கைக்கு அமைவாக தென்மேற்கு பருவ காலநிலை நாட்டின் ஊடாக வலுவடைந்து வருவதாக தெரியவருகின்றது.
இதன் காரணமாக தென்மேற்கு பிரதேசத்தில் மழை மற்றும் காற்று எதிர்பார்க்க முடியுமென்று தெரிவித்துள்ளது.
மேற்கு சப்ரகமுவ தெற்கு மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழையை எதிர்பார்க்கமுடியும்.
ஏனைய பிரதேசங்களில் விசேடமாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆங்காங்கே ஓரளவுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது இந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும்காற்று வீசக்கூடும்.
இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக கரையோரத்திற்கு அப்பாலான கடற்கரை பிரதேசத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
ஏனை கடற்பிரதேசத்தில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தெற்கு பக்கமாக காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீற்றரை கொண்டதாக இருக்கும். மன்னாரிலிருந்து கொழும்பு காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசத்தில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடும்.இந்த கடற்பிரததேசங்களில் கடல் அடிக்கடி கொந்தளிப்பாக காணப்படும்.
ஏனைய கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி 50 முதல் 60 கிலோமீற்றர்களாக அதிகரிக்க கூடும் என்பதினால் இந்த பிரதேசத்தில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு காணப்படும்.
கடற்றொழிலாளர் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் இதுதொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment