2017.05.30 ஆம்
திகதி நடைபெற்ற அமைச்சரவை
கூட்டத்தின்
போது எடுக்கப்பட்ட முடிவுகள்
அமைச்சரவை
தீர்மானங்கள்
01.இலங்கை மற்றும் சீன மக்கள் குடியரசுக்கும்
இடையில் குற்றவாளிகளை அயல்நாட்டிற்கு பறிமாறுவதற்கான உடன்படிக்கை (விடய இல. 06)
கௌரவ பிரதமர் அவர்கள் கடந்த வருடம் சீனாவில் மேற்கொண்ட
உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்ற நபர்களை அந்நியோன்னிய
ரீதியில் பரிமாறிக் கொள்வதற்கு உரிய இலங்கை மற்றும் சீன மக்கள் குடியரசுக்கும்
இடையில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அப்பறிமாற்ற ஒப்பந்தத்தில்
கைச்சாத்திடுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. கழிவகற்றும் இடங்களில் யானைகள் சஞ்சரிப்பதை
தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (விடய இல. 07)
வன ஜீவராசிகள் வலயங்களில் கழிவகற்றும் இடங்கள் 54 காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தில் 300 யானைகள்
சஞ்சரிப்பதாக பதிவாகியுள்ளது. குறித்த யானைகள் அக்கழிவுகளை உணவாக உட்கொள்ள பழகியுள்ளமையினால்
அவற்றின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக நிலைபேறான
அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு மற்றும் மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து, வன ஜீவராசிகள் அதிகமாக நடமாடும் பிரதேசங்களுக்காக முன்னுரிமை வழங்கி கழிவு
மீள் சுழற்சி வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டு செயற்படுத்துவதற்கும், திறந்த கழிவகற்றும் இடங்களில் காட்டு யானைகள் உள்நுழைவதற்கு முடியாத வகையில்
நிலைபெறான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் மூலம் உரிய இடங்களில் மின்
வேலிகளை நிர்மாணிப்பதற்கும் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர்
கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
கௌரவ பைசர் முஸ்தபா ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. புகையிரத திணைக்களத்துக்கு உரித்தான புகையிரத
ஒதுக்குக் காணிகளுக்கான நிலுவைக் குத்தகை அறவிடல் (விடய இல. 08)
புகையிரத திணைக்களத்திற்கு உரித்தான இடங்களில் இதுவரை 1,934 ஏக்கர் நிலப்பகுதியை 6,400 வரி செலுத்துபவர்களுக்கு குத்தகை அடிப்படையில்
வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதில் அதிகமானோர் சரியான முறையில் அதற்கான வரிப்பணத்தை
திணைக்களத்துக்கு செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் 1,468 மில்லியன் ரூபா தொகை அவ்வாறு வரிப்பணமாக
அறவிடப்பட வேண்டியுள்ளது. 2016ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புகையிரத
திணைக்களத்துக்கு உரித்தான இடங்களை 10 வருடத்துக்கு அதிகமான காலம் பயன்படுத்திய நபர்களுக்கு
அரசாங்கத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் 05 வருட ஆகக்கூடிய கால எல்லைக்காக முறைசார்
விதத்தில் குத்தகைக்கு விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவ்வாறு
முறைசார் விதத்தில் இடப்பகுதியை குத்தகைக்கு விடும் போது உரிய காணியினை
பயன்படுத்துவோரிடத்தில் இருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை
அறவிடுவதற்காக முறையான, சலுகை அடிப்படையிலான செயன்முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில்
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
04. உயர் கல்வி தர நிலை உறுதிப்பாட்டு
நிறுவனங்களுக்கான சர்வதேச வலையமைப்பின் அடுத்த மாநாட்டை 2019ம் ஆண்டு இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 09)
உயர் கல்வி தர நிலை உறுதிப்பாட்டு நிறுவனங்களுக்கான சர்வதேச
வலையமைப்பு என்பது உலகம் பூராகவும் பரவியுள்ள உயர் கல்வியின் கோட்பாட்டு மற்றும்
செயன்முறை ரீதியிலான தர நிலை உறுதிப்பாட்டுக்காக செயற்பாட்டு ரீதியாக நடவடிக்கை
மேற்கொள்ளும் 200 இற்கும்
மேற்பட்ட அமைப்புக்களை உள்ளடக்கிய நிறுவன வலையமைப்பொன்றாகும். இரண்டு வருடத்துக்கு
ஒருமுறை குறித்த வலையமைப்பைச் சேர்ந்த நாடுகள் இணைந்து சர்வதேச மாநாடொன்றினை
நடாத்தி வருகின்றன. அதனடிப்படையில் சுமார் 1000 அங்கத்தவர்கள் கலந்து கொள்ளவுள்ள அவ்வலையமைப்பின்
அடுத்த மாநாட்டினை 2019ம் ஆண்டில்
இலங்கையில் நடாத்துவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ
லக்ஷ;மன் கிரியெல்ல
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
05. பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கடன்
வசதியினைப் பெற்றுக் கொள்ளல் (விடய இல. 13)
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தி
கருத்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிகளை வழங்குவதற்கு
பாகிஸ்தான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள பல
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக குறித்த கடன் வசதியினைப்
பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாகிஸ்தான்
அரசாங்கத்துடன் அதனுடன் தொடர்பான கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில்
முன்னாள் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. புதிய கைத்தொழில்களை அமைப்பதற்காக பிராந்திய
கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித்துண்டுகளை ஒதுக்கீடு செய்தல் (விடய இல.14)
புத்தள, நாலன்த (மாத்தளை), நாலன்த எல்லாவல,
கலிகமுவ, களுத்துறை, மில்லவ, மினுவங்கொடை, மதுகம, தம்பதெனிய, நூரான, மாகதுர (மேற்கு),
தங்கொடுவ, உடுகாவ, திருகோணமலை ஆகிய கைத்தொழில் பேட்டைகளில்
காணப்படுகின்ற 23 காணித்துண்டுகளை,
1,617 பில்லியன் ரூபா வரையில்
முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்காக
கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவின் மூலம் தீர்மானிக்கப்படுகின்ற குத்தகை தொகையினை
அறவிடும் வகையில், 35 வருட
குத்தகையின் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்
கௌரவ ரிஷhட் பதியூதீன்
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
07. கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டையிலான
பாதசாரிகளுக்காக காலடிப்பாதை வலையமைப்பின் அபிவிருத்தி (கட்டம் iii இன் நிர்மாணப்பணிகள்) (விடய இல. 15)
கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில்
காணப்படுகின்ற அதிக வாகன நெரிசலினை கருத்திற் கொண்டு, பாதசாரிகள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய
வேண்டிய நிலைமையினை ஏற்படுத்துவதற்காக பிரசித்தி பெற்ற இடங்களை இணைக்கும் வகையில்
காலடிப்பாதை வலையமைப்பொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வேலைத்திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் டி.ஆர். விஜேயவர்தன மாவத்தையிலிருந்து
ஒல்கொட் மாவத்தை வரையிலான பகுதியின் வேலைகள் தற்போது முடிவடைந்துள்ளன. இரண்டாம்
கட்டத்தின் கீழ் ஒல்கொட் மாவத்தையினை கடற்கரை வீதியுடன் இணைக்கும் பணிகள் தற்போது
முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. வேலைத்திட்டத்தின் 03ம் கட்டமானது செபஸ்தியார் கால்வாய் ஓரமாக
தொழில்நுட்ப சந்தியிலிருந்து உயர் நீதிமன்றம் வரையிலான பாதசாரி ஒழுங்கையை
அபிவிருத்தி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், அது 06 மீட்டர் (20 அடி) அகலமாவதுடன், நீளம் 1,485 மீட்டர்களாகும்.
குறித்த பணியினை மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு
ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்தி இலங்கை கடற்படையினரின் உதவியுடன்
மேற்கொள்வதற்கு மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி
சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கை பற்றிய சபை (SLCARP)
மற்றும் மலேசியா விவசாய
ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் (MARDI) ஆகியவற்றுக்கு இடையில் தேசிய விவசாய ஆராய்ச்சி முறைமையிலுள்ள
விஞ்ஞானிகளின் மனித வளங்கள் அபிவிருத்தி தொடர்பில் செய்து கொள்ளப்பட்டுள்ள
புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 18)
2016ம் ஆண்டில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள்
மலேசியாவில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை விவசாய ஆராய்ச்சிக்
கொள்கை பற்றிய சபை (SLCARP) மற்றும் மலேசியா விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் (MARDI) ஆகியவற்றுக்கு இடையில் தேசிய விவசாய ஆராய்ச்சி
முறைமையிலுள்ள விஞ்ஞானிகளின் மனித வளங்கள் அபிவிருத்தி தொடர்பில் புரிந்துணர்வு
ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
விடயங்களை செயற்படுத்துவதற்கு தேவையான நிதியினை திறைசேரியிலிருந்து பெற்றுக்
கொள்ளும் வகையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில்
கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. 1924ம் ஆண்டு 04ம் இலக்க வெள்ளப்பாதுகாப்பு கட்டளைச்
சட்டத்தினை இரத்துச் செய்து வெள்ள முகாமைத்துவ சட்டத்தை உருவாக்குதல் (விடய இல. 19)
வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசங்களை வெளியிடுவது
தொடர்பில் 1924ம் ஆண்டு 04ம் இலக்க வெள்ளப்பாதுகாப்பு கட்டளைச்
சட்டத்தின் கீழ் விடய பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன்,
குறித்த பிரதேசத்தை
பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் நீர்ப்பாசன பணிப்பாளர்
நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டமானது ஒரு முறை மாத்திரமே சிறிய அளவில்
திருத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல், காலநிலை மாற்றங்களை கவனத்திற் கொண்டு, நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும்
பொருந்தும் வகையில் கங்கைகள் மற்றும் நீர்நிலைகளினால் ஏற்படக்கூடிய வெள்ள
அனர்த்தங்களையும், நகர்ப்பிரதேசங்களிலும்
மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் மழையினால் ஏற்படக் கூடிய வெள்ள அனர்த்தத்தையோ அல்லது
வேறு வகையில் நீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களினால் மக்களுக்கும்
அவர்களது உடைமைகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்கும், நாட்டின் சூழலிற்கும் பொருளாதாரத்திற்கும்
ஏற்படக்கூடிய இழப்புக்களையும் குறைப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள 1955ம் ஆண்டு 22ம் இலக்க திருத்தச் சட்டத்தையும், 1924ம் ஆண்டு 04ம் இலக்க வெள்ளப் பாதுகாப்பு சட்டத்தையும்
இல்லாதொழித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தையும் ஏனைய தொடர்பான நிறுவனங்களையும்
ஒருங்கிணைத்து வெள்ள முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தேவையான சட்ட
மூலத்தை வரைவது தொடர்பில் நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சர் கௌரவ
விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. 2018 – ஆசியா சமுத்திரம் சார்ந்த வலய இராச்சியங்களின்
ஊக்கமருந்து தடுப்பு நிறுவனங்களின் சந்திப்புக்கான விருந்தோம்பலை
பெற்றுக்கொடுத்தல் (விடய இல. 22)
சர்வதேச விளையாட்டுக்களில் இருந்து ஊக்கமருந்து பாவனையை
முற்றாக ஒழித்து தூய்மையான விளையாட்டை மக்கள் மயப்படுத்துவதற்காக உலக ஊக்கமருந்து
தடுப்பு நிறுவனமானது தனது அங்கத்துவ நாடுகள் மூலம் நடைமுறைப்படுத்துவதோடு இவ்
ஒன்று கூடலானது வருடாந்தம் அங்கத்துவ நாடுகளில் நடைபெற்றுவருகிறது. அவ்வாறாக 2018ம் ஆண்டு இவ் வருடாந்த சந்திப்பானது இலங்கையில்
நடத்துவதற்காக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் சுமார் 150 பேர் கலந்து கொள்ளப்படவுள்ளதுடன், அதற்காக உபசரிப்புக்களை செய்ய வேண்டியுள்ளது.
அதனடிப்படையில், 2018ம் ஆண்டு குறித்த
சந்திப்பை இலங்கையில் நடாத்துவதற்கும், அதற்காக 20 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட நிதியினை 2018ம் ஆண்டு பெற்றுக் கொள்வதற்குமாக விளையாட்டுத்
துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும்
கருத்திட்டத்தின் கீழ் லுணுவலயிலிருந்து பிபில வரையிலான (171.80 கி.மி. இருந்து 190.80 கி.மி. வரையான) நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை
வழங்குதல் (விடய இல. 29)
பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் கீழ் லுணுவலயிலிருந்து பிபில
வரையிலான (171.80 கி.மி. இருந்து 190.80 கி.மி. வரையான) நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில்
வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷமன்
கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
12. பன்னிபிட்டிய, வீரமாவத்தையிலுள்ள தொழில்துறையினர்களுக்கான
வீடமைப்புச் செயல் திட்ட வரைபு நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல.
29)
பாரிய நகரம் மற்றும் மேம் மாகாண அபிவிருத்தி அமைச்சின்
மூலம் பன்னிபிட்டிய, வீரமாவத்தையில்
தொழில்துறையினர்களுக்கு 500 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு
திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் அவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக
தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் சிபார்சு மற்றும் அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் உரிய ஒப்பந்தத்தை
வழங்குவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ
பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. அரசாங்க அலுவலர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தள
வசதிகளை வழங்குதல் - கொழும்பு மாவட்டம் (விடய இல. 30)
கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் பணிபுரியும் அரச
அலுவலர்கள் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்துக்கு வெளியிலேயே வசித்து வருகின்றனர்.
அதனால் அவர்கள் உத்தியோகபூர்வ வாசஸ்தளங்களை எதிர்பார்க்கின்றனர். தற்போது அரச
நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் காணப்படும் அரச உத்தியோகபூர்வ
வாசஸ்தளங்களின் ஒரு தொகை அரச சேவையின் நிறைவேற்று அதிகாரிகளுக்கும் மற்றும்
சேவையின் தேவை அடிப்படையில் வேறு அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள
தலைவர்கள் போன்ற அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கும் போது குறித்த
இல்லங்களில் காணப்படும் குறைபாடு பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது. அதற்கு
தீர்வாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுக்கு உரித்தான, கொழும்பு 07, ஹெக்டேயர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள,
இதற்கு முன்னர் காணி
மறுசீரமைப்பு ஆணைக்குழுவினை முன்னெடுத்துச் சென்ற இடத்தில் 0.284 ஹெக்டேயார் காணிப்பகுதியில் 08 மாடிகளில், 49 வீடுகளைக் கொண்ட உத்தியோகபூர்வ இல்லங்களை
அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தினை
செயற்படுத்துவதற்கும், அதற்கு தேவையான
நிதியினை 2017 – 2019 கால
வரையறையினுள் திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் அரச நிர்வாக மற்றும்
முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட
யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. ரமழான் மாத முஸ்லிம் பக்தர்களுக்கு
விநியோகிப்பதற்குத் தேவையான பேரீத்தம் பழங்கள் 150 மெற்றிக் தொன் அளவான மேலதிக இருப்பை சதொச ஊடாக
கொள்வனவு செய்தல் (விடய இல. 33)
ரமழான் மாத முஸ்லிம் பக்தர்களுக்கு தேவையான பேரீத்தம்
பழங்களில் 150 மெற்றிக் தொன்
தொகை சவூதி அரசாங்கத்தின் மூலம் நன்கொடையாக கிடைத்தது. அத்தொகை குறித்த
காலத்துக்கு போதுமானதாக இன்மையினால் மேலதிக 150 மெற்றிக் தொன் பேரீத்தப்பழங்களை இலங்கை சதொச
ஊடாக கொள்வனவு செய்து தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ்
முஸ்லிம் பக்தர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. கொங்கிரீட் பம்ப் டிறக்குகளுக்கான இறக்குமதி
கட்டுப்பாடுகளை விதித்தல் (விடய இல. 34)
இலங்கையில் இரண்டாவது பெரிய தொழில் துறையாக கட்டுமானத்துறை
விளங்குகின்றது. அதனால் கட்டுமானத்துறைக்கு வழிவகுப்பதன் மூலம் நாட்டிற்கு
பொருளாதார மற்றும் சமூக ரீதியான நன்மைகள் கிடைக்கப் பெறலாம். ஆகவே பத்து
வருடங்களுக்கு மேற்பட்ட கொங்கிறீட் பம்ப் டிறக்குகளின் இறக்குமதி கட்டுப்பாட்டு
அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய வகைப்பட்டியலினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை அமுலாக்குவதற்கு 2017ம் ஆண்டு மே மாதம் 19ஆந் திகதிய 2019ஃ24 இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையை
பிரசுரிக்கப்பட்டு அதனை இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச
வியாபார அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. தேசிய இயற்கை அனர்த்தம் மற்றும் அவசர நிவாரண
நடவடிக்கைகளுக்காக மீள் காப்புறுதி முறை – 2017/18 வருடத்திற்கான காப்புறுதி முறை (விடய இல. 40)
2016ம் ஆண்டு வரவு - செலவு திட்ட
முன்மொழிவுகளுக்கமைய நாட்டினுள் ஏற்படுகின்ற சூறாவளி, பூகம்பம், வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் சுனாமி போன்ற இயற்கை
அனர்த்தங்களுக்காக நாடு பூராகவும் உள்ளடங்கும் வகையில் தேசிய காப்புறுதி
நிதியத்தின் கீழ் காப்புறுதி முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காப்புறுதி
முறையின் கீழ் தற்போது பெற்றுக் கொள்ள முடியுமான கொடுப்பனவை அதிகரித்து மிகவும்
வெற்றிகரமான காப்புறுதி முறைமையாக விருத்தி செய்வதற்காக 2017ம் ஆண்டின் வரவு - செலவு திட்டத்தின் கீழ் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.
அதனடிப்படையில் மின்னல் தாக்குதல்களினால் ஏற்படுகின்ற உயிர் ஆபத்துக்கள், பல்வேறு திரௌவியங்கள் பிரஜைகளின் மீது வீழ்வதினால்
ஏற்படுகின்ற உயிர் ஆபத்துக்கள், பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்வதால் ஏற்படுகின்ற சொத்து சேதங்கள்,
பலத்த மழையினால் மதில்கள்
உடைந்து வீழ்வதால் ஏற்படுகின்ற சொத்து சேதங்கள் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு
நட்டஈடு வழங்குவதையும் உள்ளடக்கி நிதியுதவிகளை அளிப்பதனை வியாபிப்பதற்கு தேவையான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இக்காப்புறுதி செயன்முறையின் கீழ்
தேசிய காப்புறுதி நிதியத்தின் மூலம் 15 பில்லியன் ரூபா காப்புறுதி அளிக்கப்பட்டுள்ளதுடன், அந்நிதியத்துக்கு கிடைக்கும் மேலதிக இலாபத்தை
தடுக்கும் நோக்கில் மீள் காப்புறுதி முறைமையினை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
அதற்காக தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட
கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் மீள் காப்புறுதி கம்பனியொன்றை தெரிவு
செய்வதற்கும், அதற்காக தவணை
அடிப்படையில் பணம் செலுத்துவதற்கும், உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் தேசிய கொள்கைகள்
மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில்
விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
17. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால்
பாதிப்புக்குள்ளானவர்களுக்காக நிவாரணமளித்தல்
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்த தமது
குடும்ப உறுப்பினர்களுக்காக மற்றும் பல வகைகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக
அமைச்சரவையினால் தமது அனுதாபங்களையும், இக்கடினமான சூழ்நிலையில் செயலூக்கத்துடன் முன்வந்து
பணியாற்றிய மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், முப்படையினர்,
பொலிசார் மற்றும் சிவில்
பாதுகாப்பு படையினர் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் அரசாங்கத்தின் கௌரவத்தையும்
தெரிவித்துக் கொள்வதுடன் அது தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. வெள்ளப்பெருக்கினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக
உலர் உணவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஒருவருக்கு நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 225 ரூபா தொகையினை, இவ்வனர்த்த நிலைமையினை கருத்திற் கொண்டு 300 ரூபாவாக அதிகரித்தல்.
2. இவ்வருடத்தினுள் அமைச்சர்கள் பாவிப்பதற்காக
வேண்டி மற்றும் அமைச்சின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற புதிய வாகனங்கள்
கொள்வனவு செய்வதனை உடனடியாக நிறுத்துதல்.
3. இவ்வனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான
வீடுகள் மற்றும் வேறு கட்டிடங்களை இலங்கை இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு
படையணியின் மூலம் புனர்நிர்மாணம் செய்து கொடுப்பதற்காக வேண்டி வேலைத்திட்டமொன்றை
செயற்படுத்தல்.
4. நிவாரணங்களை வழங்குவதற்காக வெளிநாடுகளில்
இருந்து பெறப்பட்ட நிதியுதவிகளை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை
நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தல்.
5. 2017ம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் மூலம்
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் வேறு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள
நிதியினை, மீண்டும்
முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள மீள் அபிவிருத்தி
நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியுதவியினை ஒதுக்கிக் கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்ட கட்டிடங்களை மீள் நிர்மாணம்
செய்வதற்கு உகந்த வேலைத்திட்டமொன்றை சிபார்சு செய்வதற்கும் பின்வரும் அமைச்சர்களை
உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்:
• கௌரவ மங்கள சமரவீர அவர்கள் - நிதி மற்றும் ஊடகத்துறை
அமைச்சர்
• கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் - வெளிவிவகார அமைச்சர்
• கௌரவ கபீர் ஹாசிம் அவர்கள் - அரச வியாபார அபிவிருத்தி
அமைச்சர்
6. இவ்வனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான வீடு
மற்றும் அடிப்படை வசதிகளை புனர்நிர்மாணம் செய்வதற்காக பங்களிப்பு செய்கின்ற
தனியார் பிரிவுக்கு கிடைகின்ற வரி சலுகை தொடர்பில் தனியார் பிரிவினை
அறிவுறுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை
வழங்குதல்.
0 comments:
Post a Comment