கல்முனை சாஹிறாக்கல்லூரியில் பதுர்தீனை

அதிபர் கடமைக்கு அமர்த்துவதற்கு முன்னர்

மருதமுனையில் கடமையாற்றும் சாஹிறாக்கல்லூரி

இரு பழைய மாணவர்களுக்கு உரிய இடத்தினைப்

பெற்றுக் கொடுப்பதற்கு பழைய மாணவர் சங்க

கொழும்புக்கிளை முயற்சிக்க வேண்டும்

(அபூ முஜாஹித்)


கல்முனை சாஹிறாக்கல்லூரிக்கு ஒரு பழைய மாணவன் அதிபராக கடமையாற்றுவதை விரும்பாத சாஹிறாக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை மருதமுனையைச் சேர்ந்த சாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர் அல்லாத ஒருவரை கல்லூரியின் அதிபராக கொண்டு வர எடுக்கும் முயற்சியானது பழைய மாணவர் சங்க தர்மத்திற்கே ஒவ்வாத செயல் என கல்முனை சாஹிறாக்கல்லூரியின் பழைய மாணவர்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
கல்முனை சாஹிறாக்கல்லூரியின் அதிபர்களாக கடந்த 50 வருடகாலமாக பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவர்கள் அல்லது கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேசத்தவர்களே அதிபர்களாக இருந்த வரலாற்றை கல்முனை சாஹிறாக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளையானது மாற்ற எடுக்கும் முயற்சியானது இவ்விரண்டு ஊர்களுக்கும், பாடசாலைக்கும் செய்யும் துரோகத்தனம் என்பதை கொழும்பிலுள்ள பழைய மாணவர்கள் அறியாதிருப்பது மிகவும் வேதனையான விடயமாகும் என பழைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்முனை சாஹிறாக்கல்லூரியின் அதிபர்களாக கடந்த காலங்களில் கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேசங்களைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல், மர்ஹூம் எம்.எம்.இப்றாஹீம் (கொமெய்ன்), கே.எல்.அபூபக்கர்லெப்பை, .ஆதம்பாவா, திருமதி. காதர், எம்.எம்.இஸ்மாயில், மர்ஹூம். எம்..எம்.மீராலெப்பை, எம்..எம்.ஜூனைதீன், எம்.சீ.ஆதம்பாவா, .எம்.ஹூசைன் ஆகியோர் கடமையாற்றினர். கல்முனை சாஹிறாக்கல்லூரியில் அதிபராக மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் .ஆர்.ஏஅஸீஸ் என்பவர் இறுதியாக  கடமையாற்றியவராவார். இவர் இப்பாடசாலையிலிருந்;து இடமாற்றம் பெற்றுச் சென்று கல்முனை சாஹிறாவிற்குப் போட்டியாக மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியை உருவாக்கிய வரலாறு கொழும்புக் கிளையினருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

ஜனாப். பதுர்தீன் கல்முனை சாஹிறாக்கல்லூரியில் கடமையாற்றிய 03 வருடகாலமும் இப்பாடசாலையை எவ்வாறு அபிவிருத்தி அடையச் செய்தார் என்பது கேள்விக்குறியாகும். இவர் காலை 07.30ற்கு பாடசாலைக்கு வந்து பி. 02.30 மணிக்கு வீடு செல்லும் 06 மணித்தியால அதிபராகவே கடமையாற்றினார் என்பது அதற்காக அவருக்கு பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளையிடமிருந்து மாதாந்தம் 15,000 ரூபாவை அவர் பெற்றுக்கொண்டதும் தான் அவர் செய்த சேவை.


ஜனாப். பதுர்தீனுக்கு கல்முனை சாஹிறா அதிபர் பதவியைப் பெற்றுக்கொடுக்க முண்டியடிக்கும் கல்முனை சாஹிறா பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை மருதமுனைப் பாடசாலையில் கடமையாற்றும் கல்முனைக்குடியைச் சேர்ந்த இரண்டு அதிபர்களுக்கு அப்பாடசாலைகளில் அதிபர் பதவியைப் பெற்றுக்n கொடுக்க ஏன் முயற்சி செய்யவில்லை என்பதை பழைய மாணவர் சங்கத்தினருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்இவ்வாறு கல்முனைப் பிரதேசத்தில் வாழும் ஸாஹிறா பழைய மாணவர்கள் கொழும்பில் வாழும் பழைய மாணவர்களிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top