கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராக
PMM.பதுறுத்தீன் கடமை ஏற்கவிடாது
திருப்பி அனுப்பப்பட்டார்
கல்லூரி நுழை வாயலில் பொலிஸார்
கல்முனை
வலயக் கல்விப்
பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களின் கடிதத்துடன் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராக மீள கடமையேற்க இன்று காலை
கல்லூரிக்கு வருகை தந்திருந்த ஜனாப். பீ.எம்.எம். பதுர்தீன் அவர்களை கடமை ஏற்கவிடாது ஒரு சிலரால் திருப்பி
அனுப்பப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸாஹிறா கல்லூரியின் அதிபராக பீ.எம்.எம். பதுர்தீன் அவர்களை ஏற்பதில்லை எனவும் தற்போது அதிபராக
இருக்கும் எம்.எஸ்.முஹம்மட் அவர்களை அவரது பதவிக்காலம் முடியும்வரை அதிபராக இருப்பதற்கு
வலயக்கல்வி அலுவலகத்தை கோருவதுடன் பிரதி அமைச்சர் ஹரீஸ் உட்பட உள்ளூர் அரசியல் தலைமைகளுக்கு
அழுத்தம் கொடுப்பதெனவும் , பாடசாலையின் முகாமைத்துவ சபை, பாடசாலை அபிவிருத்தி சங்க
பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், கல்லூரியின் ஆசிரியர்கள், பகுதி தலைவர்கள்,
ஊரின் அரசியல் பிரதிநிதிகளான முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பஷீர், நசார்தீன் மற்றும்
ஊர்ப் பிரமுகர்களுடன் கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்தில் எகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது. இத்தீர்மானத்திற்கமைவாகவே ஜனாப். பீ.எம்.எம். பதுர்தீனை பதவி
ஏற்க விடாமல் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து பீ.எம்.எம். பதுர்தீன் அவர்கள் “இது தொடர்பாக சட்ட நடவடிக்கை
எடுப்பேன்’’ எனக் கூறிவிட்டு கல்முனைக் கல்விக் காரியாலயத்திற்கு சென்றுவிட்டார் எனக் கூறப்படுகின்றது.
கல்முனை ஸாஹிறாக் கலூரியில் அதிபர் பதவி தொடர்பாக இழுபறி நிலை
ஏற்பட்டுள்ளதால் இரு தரப்பார்களிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு எந்த நேரத்திலும் சச்சரவுகள்
ஏற்படலாம் என்ற அச்சத்தில் கல்லூரியின் நுழை வாயலில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்
அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment