ஞானசார தேரருக்கு உயிராபத்து,
இதனாலேயே வாக்குமூலம் அளிக்க வரவில்லை
- நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணைப் பிரிவு நேற்று (31) கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
ஞானசாரரை கைது செய்து விளக்கமறியலில் வைத்தால், சிறைச்சாலைக்குள் அவருக்கு உயிர் ஆபத்து இருப்பதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே குற்றவியல் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அப்பிரிவு நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான நடவடிக்கையில், தேரரிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், அவரால் ஆஜராக வரமுடியாமல் இருப்பதும், அவருக்குள்ள உயிராபத்தைக் கருத்தில் கொண்டே ஆகும் எனவும் டிலந்த விதானகே குற்றவியல் பிரிவிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
டிலந்தவின் முறைப்பாட்டையும் நீதிமன்றத்திடம் குற்றவியல் விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது
0 comments:
Post a Comment