நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர்

வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம்

நல்லாட்சியில் மட்டுமே நடக்கும்.



பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமூகமளிக்காமல் நீதிமன்றதுக்கு மருத்துவ சான்றிதழ் அனுப்பும் அதிசயமும் நல்லாட்சியில் மாத்திரமே நடக்கும் அதியங்கள் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..
தாங்கள் வளர்த்த கடா மார்பில் பாய்வதால் நல்லாட்சியாளர்கள் இப்போது வாயடைத்துப் போய்நிற்கின்றார்கள். ஞானசார தேரர் இந்த நல்லாட்சியாளர்களின் பங்காளி. அவரை ஏவி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம்களிடமிருந்து  பிரிக்க சதி செய்யப்பட்டதாக நாம் அன்று தொடர்ச்சியாக கூறி வந்தோம். அன்று எம்மை விமர்சித்தவர்கள் இன்று நிர்வாணமாக நிற்கிறார்கள்.
பொதுபல சேனா காரியாலய திறப்புக்கு கோத்தாபய ராஜபக் சென்றமை தொடர்பில் அவர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். பௌத்த தேரர்கள் காரியாலயம் ஒன்றை அங்குரார்பணம் செய்ய  அழைத்தார்கள். பாதுகாப்பு செயளாலர் என்ற வகையில் நான் அங்கு சென்றேன். அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில்  நான் அறிந்த பின்னர் அவர்களுடன் எந்த தொடர்பையும் நான் வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது இதனையும் விமர்சித்தவர்கள் இன்று ஞானசார தேரரை நல்லாட்சி பாதுகாக்கிறது என்பதை கண்கூடாக கண்டுகொண்டுள்ளனர். மஹிந்த அரசாங்கத்தில் அவரை பாதுகாத்த அதே சக்தி இந்த அரசாங்கத்திலும் அவரை பாதுகாக்கின்றது. அவ்வாறு பாதுகாக்க தவறும் பட்சத்தில் அவர் தொடர்பான பல உண்மைகளையும் முஸ்லிம்களுக்கு எதிராக பல சதிகளையும் ஞானசார தேரர் வெளியிட வேண்டி ஏற்படலாம். அதனால் பலரது முகத்திரைகள் கிழியும் என்பதே இதன் பின்னால் உள்ள மர்மமாகும்.

ஞானசார தேரருக்கு  மஹிந்த ராஜபக்ஷவும் கோத்தாபய ராஜபக்ஷவும் அடைக்கலம் வழங்கியதாக கூறியவர்கள் இன்று நிர்வாணமாகி நிற்கின்றனர் என அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top