கட்டுப்படுத்த முடியாத நிலையில் நில்வளா கங்கை
- வைத்தியசாலையில்
இருந்து நோயாளர்கள் வெளியேற்றம்
நில்வளா
கங்கையில் ஏற்பட்டுள்ள
நீர் அதிகரிப்பை
கட்டுப்படுத்த முடியாத நிலையில் பாரிய அனர்த்த
நிலை ஏற்பட்டுள்ளதாக
அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்கமைய
அக்குரஸ்ஸவில் இருந்து மாத்தறை நகரம் வரை
நில்வளா கங்கைக்கு
அருகில் உள்ள
பிரதேச மக்களை
உடனடியாக வெளியேறுமாறு
அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடகட,
ஹித்தட்டிய, துடாவ, மாலிம்பட, சிறிபானாகொட, மாதுருதுவ,
பரஹத்கொட, கந்துவ
ஆகிய பகுதிகளில்
உள்ள மக்களுக்கு
இதனால் பாதிப்பு
ஏற்பட கூடும்
என அடையாளம்
காணப்பட்டுள்ளது.
இதனால்
மாத்தறை வைத்தியசாலையின்
நோயாளிகளை வெளியேற்றுமாறு
வடிகால் மற்றும்
நீர்ப்பாசன துறை திணைக்களத்தின் வெள்ள அமைப்பு
அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
நில்வளா
கங்கைக்கு அருகில்
தேங்கியுள்ள நீரினை பாதுகாப்பு அணைகளினால் கட்டுப்படுத்த
முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. மதில்களினால் பாதுகாக்கப்பட்ட
பிரதேசங்களில் நீர் நிரம்பி வருவதாக தெரியவந்துள்ளது.
நில்வளா
கங்கையின் நீர்
அளவீட்டு இடத்தினை
நெருங்க முடியாத
அளவு நீர்
மட்டம் சடுதியாக
அதிகரித்துள்ளது.
இதுவரையில்
மாத்தறை வைத்தியசாலையின்
28வது வார்டின்
நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த
நோயாளிகள் வேறு
வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment