கிழக்கு மாகாண இலங்கை கல்வி நிருவாக சேவை
உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சு அறிவிப்பு
(அபூ முஜாஹித்)
கிழக்கு
மாகாணத்தில் கடமையாற்றும் இலங்கை கல்வி நிருவாக
சேவை உத்தியோகத்தர்கள்
வருடாந்த இடமாற்றத்திற்கு
உள்ளாக்கப்படவுள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள்
கோரப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணக்
கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆகக்
குறைந்தது மூன்று வருடமும், ஆகக்கூடியது
ஐந்து வருடமும்
ஒரு பதவியில்
அல்லது ஒரு
சேவை நிலையத்தில்
கடமையாற்றுவோர் மேற்படி இடமாற்றத்திற்கு உரித்துடையவர்கள் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 57 வயதுக்கு மேற்பட்டோர் மாவட்டத்தை விட்டு
வெளி மாவட்டங்களுக்கு
இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை
கல்வி நிருவாக
சேவை உத்தியோகத்தர்களுக்கான
இடமாற்றத்திற்காக மூவர் கொண்ட சபை அமைக்கப்பட்டு
அதன் மூலமாக
நடைபெறுமெனவும் இதற்கான அதிகாரிகளை பிரதம செயலாளர்
நியமிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக
கடந்த 2010ம்
ஆண்டு கிழக்கு
மாகாணத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவை
உத்தியோகத்தர்களுக்கு வருடாந்த இடமாற்றம்
வழங்கப்பட்டது. இதன்போது சிங்கள மொழி மூல
உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை.
இவ்விடமாற்றங்களின்
போது அரசியல்
தலையீடுகள் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதத்தை கிழக்கு
மாகாண கல்வி
அமைச்சு வழங்க
வேண்டுமென இலங்கை
கல்வி நிருவாக
சேவை அதிகாரிகளின்
கிழக்கு மாகாண
சங்கச் செயலாளர்
ஏ.எல்.எம்.முக்தார்
கோரியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.