முல்லைத்தீவு
மாவட்டத்தில்
'தொழில் முயற்சி இனங்காணலும்
ஊக்கமூட்டலுக்குமான
விழிப்புணர்வுச் செயலமர்வும்’
பிரதம
அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில்
முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களை
ஒருங்கிணைத்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற 'தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான
விழிப்புணர்வுச் செயலமர்வில்' பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று 28 ஆம் திகதி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ஜனோபர், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், அரச நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டல்
மற்றும் ஆலோசனைக்கமைவாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பயனாளிகளுக்கு தேவையான சுய தொழில்
உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.