இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில்
அதிபர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கை
ஆசிரியர் சங்கத்தின்
ஏற்பாட்டில் இன்று அதிபர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி கொழும்பில் போராட்டமொன்று
இடம்பெற்றது.
2009.11.13 ஆம் திகதி அதிபர் சேவை 2-1, 3 தரத்திற்கான நியமனம் பெற்ற
அதிபர்கள் புதிய
பிரமாணக் குறிப்பின்படி
அதிபர் வகுப்பு
2, 3 ஆகியவற்றுக்கு உள்வாங்கப்பட வேண்டியதுடன்
2015.11.13 ஆம் திகதி முதல் முதலாம், இரண்டாம்
தரங்களுக்குத் தரமுயர்வைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
கல்வியமைச்சு
இந்த பதவியுயர்வினை
பெற்றுக் கொடுப்பதற்கு
தேவையான எந்தவித
முயற்சியையும் மேற்கொள்ளாததை கண்டித்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
விகாரமாதேவி
மைதான திறந்தவெளி
அரங்கில் இலங்கையின்
பல பாகங்களிலுமிருந்தும்
பல நூற்றுக்கணக்கான
அதிபர்கள் கூடிக் கலந்துரையாடினர்.
பின்னர்
அலரி மாளிகையை
நோக்கிப் பல்வேறு
கோஷங்கள் எழுப்பியவாறு
பேரணியாகச் சென்ற அதிபர்கள் தமது கோரிக்கைகள்
அடங்கிய மகஜரைப்
பிரதமரின் செயலாளர்
சமன் எக்கநாயக்கவிடம்
கையளித்தனர்.
இதன்போது,
பிரதமரின் தற்போதைய
ஆலோசகரும், முன்னாள் அரச நிர்வாக அமைச்சின்
செயலாளருமான ததல்லகேயும் உடனிருந்தார்.
இது
தொடர்பில் இலங்கை
ஆசிரியர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவிக்கையில்,
பிரதமரின்
செயலாளர் உடனடியாகக்
கல்வியமைச்சின் செயலாளரைத் தொடர்பு கொண்டு அதிபர்களின்
பிரச்சினைகள் தொடர்பில் பேசினார்.
இதனையடுத்து
அதிபர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நாளை
காலை கல்வியமைச்சில்
விசேட சந்திப்பொன்று
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
பிரதமரின் ஆலோசகரான
ததல்லேயும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு பிரச்சினை
தொடர்பாக ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment