கனடாவின் ஒருநாள் பிரதமராக
ஆட்சி அதிகாரத்தை கையிலெடுத்த 5 வயது சிறுமி
கனடாவில்
5 வயது சிறுமி
ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.
கனடாவில்
உள்ள சிபிசி
கிட்ஸ் என்ற
தொண்டு நிறுவனம்,அந்நாட்டின் தேசிய
தினத்தை ஒட்டி,
அந்த தொண்டு
நிறுவனம் போட்டி
ஒன்றை அறிவித்தது.
அதில்
வெற்றி பெறுபவர்கள்
சிறப்பு பரிசுகள்
அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டு வெற்றியாளருக்கு
அதிர்ஷ்டம் அடித்தது என்று கூற வேண்டும்.
அப்போட்டியில்
வென்ற 5 வயது
சிறுமி பெல்லா
தாம்சன், கனடாவின்
பிரதமராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த
வாய்ப்பு ஒரு
நாள் மட்டுமே.
இதனால்
பெல்லா தாம்சன்
தனது குடும்பத்தினருடன்
பிரதமர் ஜஸ்டின்
டிரூடேவின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு தலையணைகளால்
ஆன கோட்
ஒன்றை அணிந்து
கொண்டார்.
பின்னர்
நாள் முழுவதும்
பிரதமர் அலுவலகத்திலேயே
செலவிட்டுள்ளார். பிரதமர் ஜஸ்டின் டிரூடேவுடன் எடுத்துக்
கொண்ட புகைப்படம்
தற்போது இணையத்தில்
வைரலாக பரவி
வருகிறது.
0 comments:
Post a Comment