முஸ்லிம் காங்கிரஸ் இன்று மூர்ச்சையாகி கிடப்பதற்கு

சந்திரிக்கா அம்மையார்தான் காரணம்.!


முஸ்லிம் காங்கிரஸ் இன்று மூர்ச்சையாகி கிடப்பதற்கு காரணமே சந்திரிக்கா அம்மையார்தான்..!
மர்ஹும் அஸ்ரப் அவர்களை பதவி ஆசைகாட்டி மோசம் செய்தவரும் சந்திரிக்கா அம்மையார்தான்...!
அவர் செய்த துரோகத்துக்கு நமது சமூகத் தலைமையும் மாட்டிக்கொண்டது, இதுவே உண்மையாகும்...!
(ஆதாரம்: அஸ்ரப் அவர்கள் சந்திரிக்காவுக்கு எழுதிய 52பக்க கடிதத்திலிருந்து...)
தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் மு.காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்ததே யாருக்கும் சோரம்போகாத, பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் அடிமைப்படாத சுதந்திரமாக குரல் கொடுத்து முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றுகொடுக்கவே இந்த கட்சியை கொண்டுவந்தார்.
இந்த கட்சியையும், அதன் கொள்கைகளையும் மக்கள் மத்தியிலே கொண்டுவந்தபோது அன்றய எதிர்க்கட்சி வாதிகள் இந்த கொள்கையை கடுமையாக எதிர்த்தார்கள்.
அதற்கு பதிலளித்த அஸ்ரப் அவர்கள் எங்களுக்கு செருப்புக்கள் தேவையில்லை கால்கள்தான் வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனை அன்றய முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொண்டார்.
அதன் பிற்பாடு பாராளுமன்றம் சென்ற அஸ்ரப் தலைமையிலான மு.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரமதாசா ஆட்சிக்காலத்தில் பதவி பட்டங்களுக்கு சோரம் போகாமல் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, அரசாங்கம் கொண்டுவரும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பதும், பிழையான திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்பதுமாக இருந்தார்கள். அந்த நேரம் மு.காங்கிரஸிக்கு நல்லதொரு மதிப்பும் மரியாதையும் இருந்து வந்தது.
அந்த நேரம் அந்த கட்சியிலே இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு விசுவாசமாகவும் அதேநேரம் இருபத்திநான்கு மணித்தியாலமும் முஸ்லிம் சமூகத்தை பற்றியே சிந்தித்தும் இருந்தனர். இதற்கெல்லாம் காரணம் எம்.பி.என்ற பதவியைத் தவிர வேறொரு சலுகைகளும் அவர்களுக்கு இல்லாத காரணத்தினாலாகும்.
இப்படி கொள்கைபற்றோடு இருந்துவந்த மு.காங்கிரஸின் கொள்கையை...
பதவியையும் பட்டத்தையும் கொடுத்து ஆசை காட்டி மோசம் செய்ததே சந்திரிக்கா அம்மையார்தான், அவருடைய சதிவலையில் அன்று விழுந்த அஸ்ரப்பும், அவரது கட்சியும் இன்றுவரை அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றது என்பதே உண்மையாகும்.
எந்த நோக்கத்துக்காக இந்த கட்சி வந்தததோ அதனை மறந்து பதவிகளுக்கும் பட்டத்துக்கும் சோரம்போய் கிடப்பதற்கு இதுவே காரணமாகும்.
சந்திரிக்காதான் இந்த திட்டத்தின் சூத்திரதாரி என்று நான் ஏன் கூறுகின்றேன் என்றால்,..
1994ம் ஆண்டு நடந்த தேர்தலில் அஸ்ரப் அவர்கள்தான் ஆட்சியமைக்கும் கிங்மேக்கராக இருந்தார். அதனால் அஸ்ரப் அவர்கள் பேரம்பேசும் சக்தியை அதிகரித்துக்கொண்டார், இந்த விடயம் தனது ஆட்சிக்கு ஆபத்தாக வந்துமுடியும் என்று திட்டம் தீட்டிய சந்திரிக்கா அம்மையார் இவர்களை மட்டம் தட்டி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதென்றால் இவர்களுக்கு பதவிகளையும் பட்டங்களையும் கொடுத்தால்தான் முடியும், என்று திட்டம் தீட்டி அதனை சாதித்தும் கொண்டார்.
அஸ்ரப் அவர்கள் சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் பங்காளியாக இருக்கவே விரும்பினார், பட்டம் பதவிகளை ஏற்க மறுத்திருந்தார் அந்தநேரம் சந்திரிக்கா அம்மையார்தான் ஆசைகாட்டி அஸ்ரப்பை படுகுழியில் தள்ளினார் என்ற விடயத்தை அஸ்ரப் அவர்கள் சந்திரிக்காவுக்கு எழுதிய 52 பக்க கடிதத்தின் ஓர் இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதனை அப்படியே தருகின்றேன்...
மெடம்! தாங்கள் தயவு கூர்ந்து ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும். அதுதான்..
எனக்கு யார் இந்த அமைச்சு பொறுப்பை தந்தவர்கள் என்ற விடயம் எப்போதும் என் மனதில் இருந்து கொண்டேயிருக்கிறது.
நீங்கள் விரும்பிய எந்த நேரத்திலும் இதை என்னிடமிருந்து எடுக்கக்கூடிய அதிகாரம் தங்களிடம் உண்டு.
அந்தவகையில் நான் ஒரு சுதந்திரப் பறவையாக, தலைநகரில் இருந்தபடியே நல்ல வருமானம் தரும் சட்டத்தொழிலை முன்னெடுக்க இருந்த என்னை, எத்தகைய சூழலில் அமைச்சுப் பொறுப்புக்கு தூண்டினீர்கள் என்பது நினைவிருக்கும்.
தாங்களின் வேறு எந்த வாதங்களின் அழுத்தமும் என்னைத் தூண்டவில்லை, மாறாக...
'மிஸ்டர் அஷ்ரப் பிரதமரினதும், நிதி அமைச்சரினதும் நிதி அமைச்சுக்கள் போக, மிகச் சிறப்பான அமைச்சு ஒன்றை ஒதுக்கி வைத்துள்ளேன். நிறையப்பேர் இதற்கு போட்டியிடுகின்றார்கள்.
இவர்களில், எவருக்கும்மில்லாத நேர்மையான ஒருவருக்கே இதை வழங்கவுள்ளேன். நான் நினைக்கிறேன், நீங்கள் நேர்மையானவர். அந்த நேர்மையை தொடர்ந்தும் கடைப்பிடிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு....
இதுவும் என்னைத் தூண்டவில்லை. தொடர்ந்தும் நீங்கள் கேட்டீர்கள்...
உங்களுடைய பிரதேசத்தில் ஒரு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும், உங்களுடைய மக்களை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லவும், இதன் மூலம் அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களையும், இதர பொருளாதார வளங்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லையா என்று கூறினீர்கள்...
மெடம் ! இது நீங்கள் என் நேர்மைக்கு தந்திருக்கும் பரிசு.! அதனை மீண்டும் மீண்டும் தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை, அதனால் நீங்கள் தறும் அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்கின்றேன்....
என்று கூறி பதவிகளை பெற்றுக்கொண்டவிடயமே இந்த கட்சியும், இந்த கட்சியில் உள்ளவர்களும், இந்த கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களும் இன்றுவரை அதனை பின்பற்றி வருவதற்கு காரணமாகும்.
இதன் விளைவுகளை அஸ்ரப் அவர்கள் அறிந்துதான் பல முறை இந்த பதவிகளை மறுத்திருக்கின்றார், ஆனாலும் சந்திரிக்காவின் சதிவலையில் மாட்டிக்கொண்டார் அதனால்தான் பின்னாலில் சந்திரிக்காவுடன் மனவேதனைப்பட்டாலும் அவரது ஆட்சியை விட்டு விரைவாக விலகிக்கொள்ள முடியாமல் தவித்தார். அதன் தாக்கம்தான் சந்திரிக்காவுக்கு எழுதிய கடிதமாகும்.
மாறாக, அஸ்ரப் அவர்களை சந்திரிக்கா அம்மையார் ஆசைகாட்டிமோசம் செய்யாமல் இருந்திருந்தால், இன்று இந்த கட்சியின் நிலைமை வேறுமாதிரி அமைந்திருக்கும், அது முஸ்லிம் சமூகத்துக்கும் வெற்றியை தேடித்தந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதே உண்மையாகும்.
இதிலிருந்து என்ன விளங்குகின்றது... கொள்கைக்காக பயணித்த மு.காங்கிசையும், அதன் தலைமையையும் ஆசைகாட்டி மோசம் செய்தது சந்திரிக்கா அம்மையார்தான் என்பது புரியும்.
அதே வழி முறையைத்தான் இன்றய பெரும்பாண்மை அரசாங்கங்களும் பின்பற்றி முஸ்லிம்களுக்கு பதவி பட்டங்களை கொடுத்து அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என்பதே யதார்த்தமாகும்.
அன்று விழுந்த அடிதான் இன்றும் நமது சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது என்பதே உண்மையாகும்.
புரிந்தால் சரிதான்...!
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top