நீர் நிரப்பப்பட்ட வாளிக்குள் விழுந்து
3 வயது பெண் குழந்தை பாத்திமா மரணம்
ஏறாவூரில் சம்பவம்
நீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் வாளிக்குள் மூன்று வயது பெண்குழந்தை
தலை கீழாக தவறி விழுந்து பரிதாபகரமாக மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.
இச்சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் ஏறாவூர், மீராகேணி ஸக்காத் கிராம 12 ஆம்
இலக்க வீட்டில் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் நோன்பை முன்னிட்டு வீட்டை கழுவி துப்பரவு செய்வதற்காக
பிளாஸ்டிக் வாளியொன்றில் நீரை நிரப்பி வைத்த குழந்தையின் தாயான கரீமா, வேறு வேலைகளில்
கவனம் செலுத்தியிருந்த வேளையில் பாத்திமா என்ற இக்குழந்தை நீர் நிரப்பியிருந்த
வாளிக்கு அருகாமையில் சென்று விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி வாளிக்குள்
விழுந்து மூர்ச்சையாகியுள்ளது.
நீண்ட நேரத்தின் பின்னர், குழந்தையின் மாமாவான 16 வயதுடைய சாஜீத் என்பவர், சிறுநீர் கழிக்க, கழிப்பறைக்கு செல்லும் போதே குழந்தை வாளியினுல் தலைகீழாக கிடப்பதைக் கண்டுள்ளார். அதிர்ச்சிக்குள்ளான
அவர் அவசரமாக குழந்தையை ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதிலும், ஏற்கனவே குழந்தை மரணித்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளளனர்.



0 comments:
Post a Comment