புதிதாக இரண்டு மைதானங்கள்
நிர்மாணிக்கத் திட்டம்
இலங்கை கிரிக்கட் நிறுவனம் புதிதாக இரண்டு மைதானங்களை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, மொனரவில பகுதியிலும், மேல் மாகாணத்தில் கட்டுநாயக்க பிரதேசத்திலும் மைதானங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொனரவில கிரிக்கட் மைதானம் ஆறு ஏக்கர் விஸ்தீரணமானதாகும். இதற்காக செலவிடப்படும் தொகை 37 இலட்சம் ரூபாவாகும்.
மேலும் கட்டுநாயக்க கிரிக்கட் விளையாட்டு மைதானம் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment