செப்டம்பரில் காலாவதியாகும் மாகாண சபை
தேர்தலை பிற்போட அரசுக்கு அவசர கால சட்டம்
கொண்டுவருவதை தவிர வேறு வழியில்லை ..
நாட்டில்
சகல மக்களினதும்
அதிருப்தியை பெற்றுள்ள இந்த அரசாங்கம் செப்டம்பரில்
காலாவதியாகும் மாகாணசபைகளுக்கான தேர்தலை பிற்போடுவதற்கு அவசர
கால சட்டத்தை
மீண்டும் கொண்டுவருவதை
தவிர வேறு
வழி இல்லை
என முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ
குறிப்பிட்டார்.
நேற்று
அவரது இல்லத்தில்
இடம்பெற்ற கலந்துரையாடல்
ஒன்றில் கலந்துகொண்டு
கருத்து வெளியிடுகையில்
அவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு
தொடர்ந்து அவர்
கருத்து வெளியிடுகையில்
,
நாளுக்கு
நாள் புகழ்
இழந்து வரும்
இந்த அரசாங்கம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலை சாக்கு போக்கு
சொல்லி பிற்போட்டு
வருகிறது.ஆனால்
செப்டம்பரில் காலாவதியாகும் மூன்று மாகாண சபைகளையும்
அரசாங்கம் கலைத்து
தேர்தலை அறிவிக்க
வேண்டும்.
ஆனால்
அரசாங்கம் தேர்தலை
எதிர்கொள்ளும் ஸ்திரமான நிலையில் இல்லை. நாம்
மாகாண சபை
அதிகாரத்தை கைப்பற்றுவோம்
என அரச
புலனாய்வு பிரிவு
அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும்,தினம் தினம்
அரசுக்கு எதிரான
ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் இடம்பெறுகின்றன இவற்றை
அடக்கவும், தேர்தலை பிற்போட வேண்டும் என்றாலும்
நாட்டில் அவசரகால
சட்டம் வரவேண்டும்.நாட்டில் தற்போது
ஏற்பட்டுள்ள நிலமைகளை பார்க்கும் போது அதற்கான
முயற்சிகள் நடைபெறுகிறகிறதோ என்ற சந்தேகம் எழுகின்றமை
தவிர்க்க முடியாமல்
உள்ளது.
இந்த
நாட்டில் யுத்தத்தை
வெற்றிகொள்ள முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளனர்.
இன்று நடப்பவைகள் சிங்கள
முஸ்லிம் மக்களிடையே
உள்ள நல்லுறவுக்கு
குந்தகம் விளைவிக்கும்
வகையில் அமைந்துள்ளன.அன்று ஞானசாரவை
கைது செய்தால்
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக கூறிய சம்பிக்க
போனறவர்கள் இந்த அரசில்இருக்கும் வரை ஞானசார
தேரருக்கு எதிராக
நீதியை நிலை
நாட்டுவது கடினமான
ஒன்று என்றே
தோன்றுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment