வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேங்களுக்கு
நேரில் விஜயம் செய்து நிவாரணப்பணிகளில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
தென்னிலங்கையில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிவாரணப்பணிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் முன்னின்று செயற்பட்டு வருகின்றனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னின்று ஒருங்கிணைத்திருந்தார். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு படகுகள் மூலமான ஆபத்தான பயணங்களையும் அவர் மேற்கொண்டிருந்தார்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேங்களுக்கு நேரில் விஜயம் செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 2011ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் வெள்ள அனர்த்தம், 2014ம் ஆண்டின் மீரியபெத்தை மண்சரிவு அனர்த்தம் என்பவற்றின் போது பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் மீறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment