கல்முனை ஸாஹிறாக் கல்லூரி அதிபர் பதவியைப்
பொறுப்பேற்க வருகை தந்த .பதூறுதீன்
மீண்டும் கல்முனைக் காரியாலத்திற்கு
இன்று காலை கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் அதிபர் பதவியைப் பொறுப்பேற்க வருகை தந்திருந்த பீ.எம்.எம். பதுர்தீன் அவர்கள்
மீண்டும் கல்முனைக் காரியாலத்திற்கு கடமைக்குச் சென்றுள்ளார் என
அறிவிக்கப்படுகின்றது.
பீ.எம்.எம். பதுர்தீன் தொடர்பாக கல்வி அமைச்சு வழங்கிய கடிதத்தில் இவர் மத்திய அரசின் சேவைக்குள்
உள்வாங்கப்பட்டுள்ளதால் இவரின் சம்பளத்தை மத்திய அரசால் வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராக தற்போதும் பீ.எம்.எம். பதுர்தீன் அவர்கள் கடமை செய்வதாகக்
கருதியே இப்படி கடிதம் வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது பீ.எம்.எம். பதுர்தீன் அவர்கள் கல்முனை கல்வி அலுவலகத்தில்
கடமை செய்து கொண்டிருப்பதால் கல்லூரியில் வேறு ஒருவர் கடமையில் உள்ளார். இந்நிலையில் கல்வி அமைச்சின் கடிதத்தைக்
கொண்டு இவர் இக் கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்க முடியாது.
இவர் இக்கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்க வேண்டுமாயின் கல்வி
அமைச்சினால் அதிபர் பதவியைப் பொறுப்பேற்குமாறு முறையான கடிதம் வழங்கப்படல் வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment