சர்ச்சைக்குரிய மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் மன்சூர்

மீண்டும் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு

(அபூ முஜாஹித்)



அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட எம்.கே.எம்.மன்சூரின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சிற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்ட அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் .எல்.எம்.காசீம் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு அக்கரைப்பற்று வலயப்பணிப்பாளராக தொடர்ந்து கடமையாற்றுமாறு கேட்கப்பட்டுள்ளார்.
மேற்படி இருவரது இடமாற்றமும் விசாரணைக்குழுக்களின் சிபாரிசின் அடிப்படையில் இடம்பெறுவதாக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட இடமாற்றக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழமையாக விசாரணை அடிப்படையில் இடமாற்றம் இடம்பெறுவதாயின் பதவிகள் எதுவும் வழங்கப்படாது விசாரணை முடிவுற்று குற்றவாளியா? சுற்றவாளியா? என தீர்மானிக்கப்படும் வரை அமைச்சிற்கு தற்காலிகமாக இணைக்கப்படும் நிருவாக நடைமுறைகளை மீறி மேற்படி இருவரும் வலயக்கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டமையானது நிருவாக நடைமுறைகளுக்கு மாற்றமான செயற்பாடாகுமென சிரேஸ்ட கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிழக்கு மாகாண நிருவாகம் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான முறையில் பாரபட்சமான முறையில் நிருவாகம் செய்வதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சி இடம்பெறவில்லைன்பதை சுட்டிக் காட்டுவதாகவும் கல்வித் துறைசார் தொழிற் சங்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top