கல்முனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை
முன்னாள் தலைவரும் பிரதி அமைச்சர் ஹரீஸின்
தந்தையுமான ஹபீப் முகம்மட் காலமானார்
விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தந்தையும் கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை முன்னாள் தலைவருமான ஹபீப் முகம்மட் (பெரியதம்பி முதலாளி) காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 27 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கல்முனை நூரானியா மையவாடியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1989 ம் ஆண்டு மறைந்த தலைவர் எம்.எஹ்.எம்.அஷ்ரஃப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டபோது அவருக்கு கல்முனையில் அலுவலகம் நடாத்துவதற்காக தனது வீட்டையே வழங்கியவர்.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆர் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் அன்னாரின்
நேர்மை கருதி அன்னார் பள்ளிவாசல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பள்ளிவாசல் தலைவர் என்ற முறையில் சமூகத்திற்காக அன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் மறைந்த தலைவருக்கும் அவர் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு மறைந்த தலைவருக்கு பெரும் ஆறுதலாகவும் பலமாகவும் இருந்தது. நீண்ட காலம் அவர் பள்ளிவாசல் தலைவராக கடைமையாற்றியவர்.
அன்னார்
மர்ஹூம்களான முஹம்மது இஸ்மாயில் மற்றும் மீரா
உம்மாவின் மகனும்,
உம்மு சல்மாவின்
அன்புக் கணவரும்
மர்ஹூம் பத்தும்மா,முஹம்மட் காசீம்,முஹம்மட் யாஸீன்
ஆகியோரின் சகோதரனும்
ஆவார்.
மர்ஹூம்
இஸ்ஸடீன்,ரஹீம்,அமீர் அலி,ஹரிஸ்(விளையாட்டுத்துறை
பிரதி அமைச்சர்),பாயிஸா,பாயிதா
ஆகியோரின் அன்பு
தகப்பனாரும் ஆவார்.
பொறியியலாளர்
ஏ.சீ.எம்.அன்சார்(அவுஸ்திரேலியா) ,டாக்டர்
ஏ.எல்.எப்.ரஹ்மான்(வைத்திய அத்தியட்சகர்- அஸ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலை)ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
0 comments:
Post a Comment