இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட
மக்களை மீட்பு பணியில் மஹிந்தவின் மைந்தர்கள்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்கள் நிவாரணம் வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, யோஷித ராஜபக்ஸ, ரோஹித ராஜபக்ஸ ஆகியோர் இணைந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று மாலை அவர்கள் இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்பிட்டிய அவித்தாவ, பாணிகொட பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகளுக்காக ரோஹித மற்றும் யோஷித ஆகியோர் சென்றுள்ளனர்.
கடந்த சில நாட்களாக வெள்ளத்தில் சிக்கியுள்ள பிரதேச மக்களுக்கு ரோஹித மற்றும் யோஷித நிவாரண பொருட்கள் வழங்கியிருந்தனர்.
இதேவேளை மாத்தறை பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நேற்று மாலை நாமல் ராஜபக்ஸவினால் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment