20வது குழந்தையை பெற்றெடுத்த

பிரித்தானியாவின் மெகா குடும்பம்

பிரித்தானியாவின் மெகா குடும்பம் ஒன்று தங்களுக்கு பிறந்த 20வது குழந்தையை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடியுள்ளனர்.

கடந்த திங்களன்று Sue மற்றும் Noel Radford தம்பதியினருக்கு Archie என்ற குழந்தை பிறந்தது. இது இத்தம்பதியினருக்கு 20வது குழந்தையாகும். ஆனால் இதுதான் தங்களது கடைசி குழந்தை என Sue மற்றும் Noel Radford தம்பதி தெரிவித்துள்ளனர்.

Noel Radford தம்பதியினருக்கு ஏற்கனவே Chris(28), Sophi (23), Chloe(22), Jack(20), Daniel(18), Luke மற்றும் Millie(16), Katie(14), James(13), Ellie(12), Aimee(11), Josh(10), Max(8), Tillie(7), Oscar(5), Casper(4), Hallie(2) மற்றும் Phoebe(13 மாதங்கள்) என 19 பிள்ளைகள் உள்ளனர்.

தங்களுக்கு 9-வது குழந்தை பிறந்த பின்னர் கருத்தடை செய்துகொண்டுள்ளனர். ஆனால் அது தோல்வியில் முடியவே மீண்டும் கருத்தடை முயற்சி மேற்கொள்வதில்லை என அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

10 படுக்கை அறைகள் கொண்ட வீடு ஒன்றில் குடியிருந்து வரும் இந்த மெகா குடும்பம், தங்களது குழந்தைகள் அனைவரையும் ஏற்றிச் செல்லும் வகையில் 15 இருக்கைகள் கொண்ட வாகனம் ஒன்றையும் சொந்தமாக வாங்கியுள்ள Noel Radford தம்பதியினர் அதிலேயே குழந்தைகள் அனைவரையும் பாடசாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு இட்டுச் செல்கின்றனர்








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top