ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக

யாழ்ப்பாணத்தில் ஒன்று சேர்ந்த மக்கள்

தாக்குதலை கண்டித்து மாபெரும் போராட்டம்


மியான்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இன ரீதியிலான ஒடுக்கு முறைத் தாக்குதலைக் கண்டித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று (21) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கொளுத்தும் வெயில் மத்தியிலும் கலந்து கொண்டனர்.

நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கருகில் இன்று (21) முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம், அங்கிருந்து பேரணியாக நாவலர் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றடைந்தது.

அங்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் மியான்மார் நாட்டில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை நிறுத்திப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை காலம் தாழ்த்தாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top