நாட்டின் தெருப் போக்குவரத்து ஓழுங்கு மீறல்கள் குறித்த சீர்திருத்தச் சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இம்மாதத்துக்குள் வெளியிடப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெருந் தெருக்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

வாகன சாரதிகளின் 5 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல் மற்றும் தண்டப்பண தொகையினை உயர்த்துதல் உள்ளிட்ட சட்டங்களை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், மது போதையில் வாகனம் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட காப்புறுதி பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், புகையிரத கடவைகளில் பாதுகாப்பின்றி வாகனம் செலுத்துதல் மற்றும் உரிய வயதை எட்டாதவர்கள் வாகனம் செலுத்துதல் போன்ற ஐந்து வகையான குற்றங்களுக்கே இவ்வாறு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான சட்டம் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top