உஸ்பெகிஸ்தான் நாட்டின் தேசிய உணவான புலாவை பிரம்மாண்ட முறையில் தயாரிக்க அந்நாட்டின் சமையல் கலைஞர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, இரண்டாயிரம் கிலோ இறைச்சியும் மூவாயிரம் கிலோ காய்கறிகளும் சேர்க்கப்பட்டு புலாவ் சமைக்கப்பட்டது.
50 சமையற்கலை நிபுணர்களின் 6 மணிநேர கடின உழைப்பில் உருவான இந்த புலாவ், ஏழாயிரத்து 360 கிலோ எடையுடன் உலகின் மிகப்பெரிய புலாவ் என கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே உஸ்பெகிஸ்தான் புலாவ் உணவுக்கு சிறந்த கலாச்சார உணவு என்ற அங்கீகாரம் கடந்தாண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment