மாணவர்கள் 250 பேர் சாரியை ஏந்திய விவகாரம்;
விசாரணைக்கு வலியுறுத்தல்
திருமண வைபவத்தின் போது, மணப்பெண்ணின் சாரியை, பாடசாலை மாணவர்கள் ஏந்திய விவகாரம் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
கண்டி, கண்ணொருவையிலேயே இந்தச் சம்பவம், வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. அந்த வைபவத்தில், சுமார் மூன்றரை கிலோமீற்றர் நீளமான சாரியை, மாணவர்கள் 250 பேர் ஏந்தியிருந்தனர்.
கண்டி-கண்ணொருவை வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்தே விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, அந்த அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திருமண வைபவத்துக்கு பிரதம அதிதியாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பங்கேற்றிருந்தார்.
கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கிலேயே, மணப்பெண்ணுக்கு சுமார் 3200 மீற்றர் நீளமான சாரி அணிவிக்கப்பட்டதாகவும், அந்த மணப்பெண், சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் என்றும், மணப்பெண் அலங்காரம் செய்பவர் என்றும் அறியமுடிகின்றது.
0 comments:
Post a Comment