கறைபடிந்த விருப்பு வாக்கு முறைக்கு முற்றுப்புள்ளி
தேர்தல் தொகுதிக்கு பொறுப்புக்கூறக் கூடிய
மக்கள் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவார்கள்.
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்தின் மூலம் கறைபடிந்த விருப்பு வாக்கு முறையில் இருந்து விலகி, தேர்தல் தொகுதிக்கு பொறுப்புக்கூறக் கூடிய மக்கள் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவார்கள்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பைசர் முஸ்தபா இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுகின்றது. இதன்மூலம் அரசியல் நிர்வாக நடவடிக்கைகளில் மறுமலர்ச்சி ஏற்படும். 50 சதவீத தேர்தல் தொகுதி முறை, 50 சதவீத பட்டியல் முறை, அடங்கிய கலப்பு முறையின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். இதன்மூலம் எந்த ஒரு இன குழுமத்திற்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது. தேர்தல் தொகுதி எல்லைகளை அமைக்கும் பணிகளில் நான்கு மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான தெரிவுக்குழு கூட்டத்தில் விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறையை மாற்றி பொருத்தமான தேர்தல் முறையை அறிமுகம் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரையுடன் ஜனாதிபதி அளித்த தேர்தல் உறுதிமொழியும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா இதன்போது சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment