கரையைக் கடந்தது இர்மா புயல்:
ஃ ப்ளோரிடாவை புரட்டிப் போட்டது!
அமெரிக்காவின்
ஃப்ளோரிடா மாகாணத்தைப்
புரட்டிப் போட்டுள்ளது
இர்மா புயல்.
அட்லாண்டிக் பெருங்கடலில் மிகவும் சக்திவாய்ந்த
புயலாகக் கடந்த சில நாள்களுக்கு முன்
உருவானது. சுமார்
220 கி.மீ
வேகத்தில் சுழற்றியடித்த
இந்தப் புயலால்,
ஃப்ளோரிடா மாகாணமே
ஸ்தம்பித்துள்ளது.
புயல்
காரணமாக,
60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளுக்கு
ராணுவம் தயார்
நிலையில் உள்ளது.
ஆனால், புயல்
தொடர்ந்து வலுவாக
இருப்பதால், மீட்புப் பணிகளைத் தொடங்க முடியவில்லை.
புயல் காரணமாக
25 செ.மீ
அளவுக்கு மழை
பெய்யும் என்று
எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இர்மா புயலால் ஜார்ஜியா,
தெற்கு கரோலினா
உள்ளிட்ட மாகாணங்களும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,
இர்மா புயல்
நேற்று மாலை
200 கி.மீ
வேகத்தில் கரையைக்
கடந்ததுள்ளது. குறிப்பாக, இந்தப் புயல் சற்றும்
வலு குறையாமல்,
வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்துவருகிறது. தற்போது, நேபிள்ஸ் பகுதியைச் சூறையாடிவருகிறது
Add caption |
0 comments:
Post a Comment