பாடசாலைக்கு செல்லாத இடைவிலகள்

மாணவர்கள்  பிடிக்கபடுவர்

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்



புதிய கல்வி கொள்கைக்கு அமைய இலங்கையில் கல்வித்துறையில்  பல மாற்றங்கள் கொண்டு வரபட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் 30 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்டஇன்ஸ்பெக்டர் மேற்பார்வைஅதுவும் மீண்டும் கொண்டு வரப்படுகின்றது. அதேவேலை ஊர் ஊராகவும் தோட்டம் தோட்டமாகவும் சென்று பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை பிடித்து கொண்டு வந்து மீண்டும் அவர்களை பாடசாலைக்கு சேர்க்கும் விஷேட குழுவொன்று நாடளாவிய ரீதியில் உறுவாக்கபடவுள்ளது. இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார் .
அம்பகமுவ பிரதேசம் வெலிஓயா தோட்டம் கீழ் பிரிவிற்கான கொன்கிரீட் வீதி மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு பாவனைக்காக மக்களிடம் கையளிக்கபட்டது இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் இராஜாங்க கல்வியமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்இதன் போது இங்கு கருத்து தெரிவிக்கையிவேயே இவ்வாறு தெரிவித்தார் 

தொடர்து இங்து கருத்து தெரிவிக்கையில் இந்த செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலைக்கு மாணவர்கள் செல்லாத காரணங்கள் இனங் காணப்பட்டு அதற்கான உதவிகளும் மேற்க்கொள்ளப்படும.;  இலங்கையில் படிக்காதவர்கள் இருக்க கூடாது என்பதற்காகவும் படித்தவர்களின் கல்வி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் வருமை மற்றும் வேறு காரணங்களினால் பாடசாலை கல்வியை இடையில் விட்ட சிறார்களை கல்வி கற்க வைப்பதற்காகவும் இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கபடவுள்ளது என்று கூறிளார்.

இந் நிகழ்வில்  மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர். ராஜாரம்  மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ். விஸ்வநாதன் பனிப்பாளர் எம். கனகராஜ்¸ முன்னனியின் சிரேஷ்ட பிரதி தலைவர் எஸ்.கிருஸ்ணன் முன்னனியின் பிரதி பொது செயலாளர் ஏம் பிரசாந் உட்பட மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பா.திருஞானம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top