முஸ்லிம் தலைவர்கள்
ஆதரவாக வாக்களித்து
அவர்களது சமூகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டனர்
முஸ்லிம்
அரசியல் வாதிகள்
அனைவரும் ஒன்றிணைந்து,
இனி கிழக்கில்
முஸ்லிம் முதலமைச்சர்
ஒருவர் வரவே
முடியாத ஒரு
சட்ட திருத்தத்துக்கு
ஆதரவளித்து வரலாற்று துரோகத்தை அரங்கேற்றியுள்ளதாக ஹம்மாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்
ராஜபக்ஸ தெரிவித்தார்.
அவர்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நேற்று
20.09.2017ம் திகதி புதன் கிழமையை இலங்கை
வாழ் முஸ்லிம்கள்
தங்களது நாட்குறிப்பு
புத்தகங்களில் கரி நாளாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.நேற்று இவ்வரசால்
கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தமானது வடக்கு மற்றும்
கிழக்குக்கு வெளியே காணப்படுகின்ற முஸ்லிம் மக்களுக்கே
அதிக பாதிப்பானது
என்றே என்னுடன்
கலந்துரையாடிய பல முஸ்லிம்கள் கூறினர்.நான்
இதன் பின்னால்
மறைந்துள்ள ஆபத்துக்களை விளக்கிய போது என்னோடு
கதைத்த முஸ்லிம்கள்
தலைமீது கை
வைத்து சிந்தித்தார்கள்.
இது
கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களைப் போலவே
கிழக்கு மக்களுக்கும்
அதிக ஆபத்தனாது.
இத் தேர்தல்
முறமையினூடாக கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம்
அதிகரிக்கும் படியான ஏற்பாடுகள் செய்யப்படும்.கிழக்கில்
தமிழர் தரப்பு
ஆட்சியமைக்க முஸ்லிம்கள் ஆதரவு தேவையில்லை என்ற
நிலை உருவாக்கப்படவுள்ளது.
இது உருவானால்
முஸ்லிம்கள்,தங்களது முதலமைச்சர் கனவை கைவிட
வேண்டியது தான்.
தமிழ் அரசியல்
தலமைகளின் பின்னால்
செல்ல வேண்டிய
நிலையெ ஏற்படும்.
பின்கதவால்
கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்தை நாங்கள்
எதிர்த்தோம். எங்களோடு முஸ்லிம் தரப்பு இணைந்திருந்தாலோ
அல்லது குறைந்தது
நடுநிலமை பேணி
இருந்தாலோ, இந்த வரலாற்று துரோகத்தை முஸ்லிம்களால்
வெற்றிகொள்ள முடிந்திருக்கும்.நாங்கள் உங்களை, எங்களோடு
பூரணமாக இணைந்து
அரசியல் முன்னெடுக்க
கூறவில்லை.உங்கள்
நலன் பாதிக்கப்படக்
கூடிய இவ்விடயத்தில்
ஒன்றிணைந்திருக்கலாம்.இதனை எதிர்த்த
முஸ்லிம் தலைவர்கள்
ஆதரித்ததன் மர்மம் புரியவில்லை.இதனை எதிர்த்து
முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் யார் என்பதை,
உங்கள் உள்ளத்தை
தொட்டு கூறுங்கள்
பார்க்கலாம்.
எமது
ஆட்சிக் காலத்தில்
முஸ்லிம்களுக்கெதிரான ஓரிரு சம்பவங்கள்
அரங்கேறியதை மறுக்கவில்லை.அதனை வைத்தே இன்றைய
முஸ்லிம் அரசியல்
வாதிகள் எம்மை
இகழ்ந்தார்கள்.முஸ்லிம்களுக்கு பாதிப்பான பாரிய அநீதியை
நிகழ்திவிட்டு,நாம் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ததாக
கூறுவார்களாக இருந்தால், அதற்கு முஸ்லிம் மக்களே
தகுந்த பாடம்
புகட்ட வேண்டும்
என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment