மூன்று அமைச்சர்களின்
அச்சுறுத்தலுக்கு தலைசாய்ப்பு!
சபையில் வாக்கெடுப்பும்
தாமதம்
முன்னாள் அமைச்சர்
டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு
அமைச்சர்களான
ரிஷாட் பத்தியுத்தீன், ரவுப் ஹக்கீம், மனோ
கணேசன் ஆகியோர்
நேற்று அரசாங்கத்துக்கு
எதிராக முன்னெடுத்த
கடும் நடவடிக்கை
காரணமாகவே மாகாண
சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்ட மூலம்
மீதான வாக்கெடுப்பு
இரவு 8.00 மணி
வரை தாமதமாகியது
என முன்னாள்
அமைச்சர் டளஸ்
அழகப்பெரும தெரிவித்தார்.
தேர்தல்
முறைமையில் தொகுதி வாரியாக 60 வீதமும், விகிதாசார
அடிப்படையில் 40 வீதமும் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறுமென
அரசாங்கம் யோசனை
முன்வைத்திருந்தது. இந்த யோசனையை
இம்மூன்று அமைச்சர்களும்
ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த
யோசனையை 50 இற்கு 50 என மாற்றினாலேயே அரசாங்கத்துக்கு
ஆதரவாக வாக்களிப்போம்
என அரசாங்கத்தை
அச்சுறுத்தியுள்ளனர். இவர்களுடன் பேச்சுவார்த்தை
நடாத்தவே நேற்று
பாராளுமன்றம் வாக்கெடுப்பைத் தாமதப்படுத்தியது.
அரசாங்கத்துக்கு
குறித்த சட்ட
மூலத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம்
தேவையாக இருந்தது.
இதற்காக அரசாங்கம்
அந்த மூன்று
அமைச்சர்களின் அச்சுறுத்தலுக்கு தலைசாய்த்தது
எனவும் டளஸ்
எம்.பி.
மேலும் கூறினார்
0 comments:
Post a Comment