இது தொடர்பான உடன்படிக்கையில் உரிய தரப்புக்கள் நேற்று கைச்சாத்திட்டன.
இதில் கல்வியமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் உரையாற்றுகையில், இது இலவசக் கல்வியின் நன்மைகள் மேலும் கூடுதலாக மாணவர்களுக்கு கிடைக்க வழிவகுக்கிறது. இந்தக் காப்புறுதித் திடடத்தின் மூலம் பாடப் புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றுக்கு அப்பால் இலவச காப்புறுதித் திட்டமொன்றையும் மாணவர்கள் பெறுவதாக அமைச்சர் கூறினார்.
காப்புறுதித் திட்டத்தின் மூலம் மாணவர் ஒருவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் சமயத்திலும், மருத்துவ சேவைகளுக்காகவும் 2 லட்சம் ரூபா கிடைக்கும்.
0 comments:
Post a Comment