பேஸ்புக் மூலம் மோசடி செய்த பெண் கைது
வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொருட்களை பெற்றுத் தருவதாகக் கூறி பேஸ்புக் ஊடாக மோசடி செய்த பெண்ணொருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரே இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி, அதற்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கு பரிசுப் பொதி இறக்குமதி செய்து தருவதாகக் கூறி பலரிடம் இவர் பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment