இனப் பிரச்சனைக்கான சரியான தீர்வினை

பெற்றுக் கொள்ள நல்லாட்சியே சரியான சந்தர்ப்பம்

வடகிழக்கு தமிழ்  தலைவர்கள் நழுவ விட கூடாது

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்




இனப் பிரச்சனைக்கான சரியான தீர்வினை பெற்றுக் கொள்ள இந்த நல்லாட்சியே சரியான சந்தர்ப்பம் இதை வடகிழக்கு தமிழ் தலைவர்கள் நழுவ விடக் கூடாது என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.
யாழ் வடமராட்சி பருத்திதுறை ஹாட்லி கல்லூரிக்கான வகுப்பறை கட்டடதொகுதி¸ அதிபருக்கான விடுதி திறப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிகல் நாட்டும் விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தார்.
 இந் நிகழ்வில்; வட மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன், மாகாண கல்வி பனிப்பாளர் உதயகுமார் உட்பட கல்வி அதிகாரிகள்; கலந்து கொண்டார்கள்

இந் நிகழ்வில் தொடர்ந்து கருத்து  தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த நாட்டில் 30 வருட கொடூர யுத்தம் நடைபெற்றதால் பல்லாயிரகணக்கான உயிர்களை இழக்கவும்; சொத்துகளை இழக்கவும் நேரிட்டு உள்ளது. இதனால் நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நமது நாடு மட்டுமல்ல எதிர்கால சழூதாயமும் பல பின்னடைவுகளை சந்தித்து வருகின்றது. இது தொடர்து செல்லுமானால் எமது சழூதாயத்தின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும். இந் நிலையில் இந்த இன பிரச்சனைக்கு ஒரு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசாங்கம் முனைகின்ற போது வடகிழக்கு தழிழ் தலைவர்கள் உட்பட ஏனைய தழிழ் தலைவர்கள் ஒன்றினைந்து செயற்பட்டு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள ஒத்துழைத்து செயல்பட  வேண்டும். அத்துடன் தீர்வு திட்டத்தை உடனயாக வழங்குவதற்கும் அழுத்தததை கொடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு உரிய தீர்விணை பெற்றுக் கொடுக்கும் முகமாக 1958 ஆம் பண்டா செல்லா ஒப்பந்தம்¸ செல்வா டட்லி ஒப்பந்தம்¸ 1980 களில் அமிர்தலிங்கம் மாகாண அபிவிருத்தி சபை பேச்சுவார்த்தை¸ 1985 திம்பு பேச்சுவார்த்தை¸ 1988 இந்து லங்கா ஒபப்ந்தம்¸ இது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்க்கும் இடையிலான நடைபெற்றது. இதன் மூலமே 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தமும் நோர்வே மத்தியஸ்தத்தின் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே போகலாம்இவை அனைத்தற்கும் இன்னமும் சரியான தீர்வு கிடைத்தாக தெரியவில்லை. பல ஒப்பந்தங்கள் கிழித்து எறியபட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தற்போது  எம்மிடம் எதிர்கட்சி தலமை பதவியில் சம்பந்தர் ஐயா அவர்களும். வட மாகாண முதல்வராக சீ.வி.விக்ணேஸ்வரன் ஐயா அவர்களும் வட கிழக்கில் பாராளுமன்றம்  உட்பட மாகாண சபைகளில்  உறுப்பினர்கள் இருகின்றார்கள். அத்துடன் வடக்கு கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் குறிப்பாக மலையகத்தில் தமிழ் தலைவர்கள்¸ பாராளுமன்றம் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாக இனையும் சந்தர்பத்தில் இந்த இன பிரச்சனைக்கு நல்லாட்சி அரசாங்கத்திலேயே தீர்வு காணலாம். இதற்கு நாம் அனைவரும் இணைந்து செயற்படும் அதேவேலை வடகிழக்கு தமிழ் தலைவர்கள்  இந்த சந்தரப்பத்தை கைவிட்டால் நிலமை கேள்வி குறியாகிவிடும்என்று கூறினார்.

பா.திருஞானம்  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top