மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான
தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்
மியான்மர்
நாட்டில் வசித்துவரும்
ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது அந்நாட்டு ராணுவம்
நடத்திவரும் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.
மியான்மர்
நாட்டில் வசித்துவரும்
ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது அந்நாட்டு ராணுவம்
தொடர்ந்து தாக்குதல்
நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்
காரணமாக அவர்கள்
அண்டை நாடுகளான
இந்தியா மற்றும்
வங்கதேசத்திற்கு அகதிகளாக சென்று வருகின்றனர்.
இதையடுத்து,
கடந்த மாதம்
25-ம் திகதியில்
இருந்து நேற்றுவரை
இரண்டு வார
காலத்தில் சுமார்
2 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்குள்
நுழைந்துள்ளனர் என ஐ.நா.சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில்,
ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான்
கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது. இன்று பாகிஸ்தானில் உள்ள மியான்மர்
தூதரை, பாகிஸ்தான்
வெளியுறவுத்துறை மந்திரி தெமினா ஜன்ஜுவா சந்தித்து
பேசினார். அப்போது
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்டுவரும்
தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும்
இந்த தாக்குதல்
சம்பவங்களை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும்
வலியுறுத்தினார்.
இதற்கு
பதிலளித்த மியான்மர்
தூதர் இந்த
விசயம் தொடர்பாக
மியன்மர் அரசிடம்
பேசி விரைந்து
நல்ல முடிவு
எடுக்கப்படும் என கூறினார்.
0 comments:
Post a Comment