பாடசாலை மாணவிகளை
அசௌகரியத்திற்கு உள்ளாகும்
வகையில் எதுவும்
நடக்கவில்லை
கின்னஸ் சாதனை முயற்சியில்
சர்ச்சையில் சிக்கிய மணப்பெண் பேசுகிறார்
கின்னஸ்
சாதனைக்காகவே நீளமாக முந்தானையுடன் திருமண சேலையை
அணிந்ததாகவும் பாடசாலை மாணவிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும்
நோக்கம் இருக்கவில்லை
எனவும் கின்னஸ்
மணப்பெண் சஜினி
சுரவீர தெரிவித்துள்ளார்.
கண்டி,
கன்னொருவ பிரதேசத்தில்
கின்னஸ் சாதனைக்காக
ஏற்பாடு செய்யப்பட்ட
திருமண நிகழ்வு
சர்ச்சையை ஏற்படுத்தி
இருந்த நிலையில்
இது தொடர்பாக
கருத்து தெரிவிக்கும்
போதே இவ்வாறு
கூறியுள்ளார்.
தொடர்ந்தும்
மணப்பெண் கருத்து
தெரிவிக்கையில்,
திருமண
நாளில் பாடசாலை
சீருடை அணிந்த
பிள்ளைகள் முந்தானையை
பிடித்துக்கொண்ருந்தமையை தான் பெரிய
தவறாக எண்ணியிருக்கவில்லை.
நாட்டிற்கு
புகழை ஏற்படுத்தும்
நோக்கிலும், கின்னஸ் சாதனை படைக்கவும், பாடசாலை
மாணவிகளை பயன்படுத்தியது
தவறு என
சமூக வலைத்தளங்களுக்கு
தெரிந்தாலும், அங்கு எந்த பிள்ளைகளையும் அசௌகரியத்திற்கு
உள்ளாகும் வகையில்
எதுவும் நடக்கவில்லை.
எனக்கு
அலங்காரம் செய்த
அழகு கலை
நிபுணரும், சேலையை அணிவித்த ஆடை அலங்கார
கலைஞருமே திருமண
நிகழ்வில் பாடசாலை
மாணவிகளை சம்பந்தப்படுத்தினர்.
மேலும்,
பிள்ளைகளுக்கு தேவையான உணவு மற்றும் பானங்கள்
வழங்கப்பட்டன. வெயிலில் வைத்து அவர்களை அசௌகரியத்திற்கு
உள்ளாக்கவில்லை.
சமூக
வலைத்தளங்கள் இதனை தேவையற்ற வகையில் காட்டியுள்ளன
என கின்னஸ்
மணப்பெண் சஜினி
சுரவீர குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment