பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இணக்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கஹாகான் அபாசி Shahid Khaqan Abbasi அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இலங்கை நேரப்படி 19 ஆம் திகதி நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.
.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, நியூயோர்க் சென்றுள்ள இரண்டு நாடுகளின் தலைவர்களும், நேற்று .நா தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.
தீவிரவாதம், இயற்கை அனர்த்தங்களால் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்ட போது, பாகிஸ்தான் வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தச் சந்திப்பின் போது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன், இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை இருநாடுகளின் தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி, இலங்கை நாட்டை மிகமுக்கியத்துவம் வாய்ந்த நாடாக பாகிஸ்தான் கருத்தில் கொண்டுள்ளதாகவும், இலங்கையுடன், இருதரப்பு உறவுகளுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


சார்க் அமைப்பின் மிக முக்கியமான நாடாக இலங்கையை நாங்கள் நம்புகிறோம். பிராந்திய அமைப்பில் இலங்கை முக்கியமான பங்கை ஆற்ற முடியும். இலங்கையுடன் வர்த்தக மற்றும் பொருளாதைார உறவுகளை மேலும் விரிவாக்கிக் கொள்ள நாம் விரும்புகிறோம்என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top