கலாநிதி ஹன்சியா றஊஃப்
முதலாவது
பெண் பேராசியராக பதவியுயர்வு!
தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக
பீடத்தின் முதலாவது
பேராசியராக இப்பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்த கலாநிதி அஹமட்லெப்பை அப்துல் றஊஃப்
அவர்களின் பாரியார்
கலாநிதி பாத்திமா ஹன்சியா
றஊஃப் அவர்கள்
பதவியுயர்வு செய்யப்பட்டுள்ளார்.
இப்
பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண்
பேராசியராகக் கடமையேற்றிருக்கும் இவர், இப்பீடத்தின் முன்னாள்
பீடாதிபதியாக இரண்டு தடவைகளும், முகாமைத்துவ பீடத்தின்
பட்டப்பின்படிப்பு நிலையத்தின் இணைப்பாளராகவும்,
வெளிவாரிப்படிப்பு மற்றும் தொழில்சார்
கற்கைகள் நிலையத்தின்
இயக்குணராகவும், முகாமைத்துவத் திணைக்களத்தின்
தலைவராகவும் பதவிகள் வகித்து சேவைகளைச் செய்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்
இப்பீடத்தின் பீடாதிபதியாக இருந்த காலத்தில் சந்தைப்படுத்தல்,
மனிதவளம், தகவல்
மேலாண்மை, நிதியியல்
மற்றும் கணக்கீடு
போன்ற விசேட
கற்கைகளை அறிமுகப்படுத்தியதுடன்
முகாமைத்துவ தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானமானிக் கற்கையை
உருவாக்கி இவையனைத்துக்குமான
ஆளணிகளையும் ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.
சர்வதேச
ஆய்வரங்குகளில் பல ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்ததோடு பத்துக்கும்
மேற்பட்ட புத்தகங்களை
வெளியிட்டு மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சி
பெற்றுள்ள இவர்
தனது வியாபார
நிருவாக இளநிலைப்
பட்டத்தை யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்திலும், வியாபார நிருவாக
முதுமானிப் பட்டத்தை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும்,
மனிதவள முகாமைத்துவம்சார்
கலாநிதிப் பட்டத்தை
பேராதனைப் பல்கலைக்கழகத்திலும்
பெற்றவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இவர்
தர்ஹா டவுனைச் சேர்ந்த முஹம்மது ஸகரியா,நூர் ஸபா ஆகியோரின் புதல்வியும், தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் கணக்கியல் மற்றும் நிதியியல் திணைக்களத்தின் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர்
கலாநிதி அஹமட்லெப்பை அப்துல் றஊஃப் அவர்களின் பாரியாருமாவார்;.இவர் தர்ஹா நகர் அளுத்கம
முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியுமாவார்.


0 comments:
Post a Comment