மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்

சுனாமி எச்சரிக்கை

மெக்சிகோ நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு பசுபிக் கடலோரம் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் தெற்கு கடல்பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8 அலகுகளாக பதிவாகியுள்ளது.
பிஜிஜியாபன் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 123 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மெக்சிகோ நகரில் கட்டிடங்கள் குலுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து பேரலைகள் எழுவதற்கான ஏற்பட வாய்ப்பு உள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top