இந்த நடைமுறை, கடந்த 4ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஒருவேளை சாப்பாட்டுக்கு இதுவரையிலும் அறவிடப்பட்ட 150 ரூபாய், 200 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சேவையாற்றுவோருக்கு, இதுவரை காலமும் மாதமொன்றுக்கு 120 ரூபாய் மட்டுமே அறவிடப்பட்டது. அத்தொகை, 350 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர்களிடமிருந்து பகல்போசனத்துக்காக, இதுவரையிலும் அறவிடப்பட்ட 65 ரூபாய், 70 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேநீருக்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இதுவரையிலும் அறவிடப்பட்ட 25 ரூபாய், 50 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களிடமிருந்து தேநீருக்காக, இதுவரையிலும் அறவிடப்பட்ட 15 ரூபாய், 20 ரூபாய் வரையிலும் அறவிடப்பட்டது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் உள்ள, பொதுமக்களுக்காக உணவகத்தில், ஒரு கோப்பை தேநீரின் விலை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சேவையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான, உணவு விலைகளில், எட்டு வருடங்களுக்கு பின்னரே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இறுதியாக, 2008 ஆம் ஆண்டே, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உணவுப் பொருட்களின் விலைகளை கருத்தில் கொண்டே, நாடாளுமன்ற விசேட குழுவின் ஊடாக, இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment